சபையை ((மஸூரா)) முடிக்கும் போது ஓதும் துஆ:-
ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்: திர்மிதீ 3355.
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(B] ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பி[F]ரு(க்)க வஅதூபு(B] இலை(க்)க.
அல்லது கீழ்க்கண்ட துஆவையும் ஓதலாம்.
ஸுப்(B]ஹான(க்)கல்லாஹும்ம வபி(B]ஹம்தி(க்)க அஸ்தக்பி[F]ரு(க்)க வ அதூபு(B] இலை(க்)க.
ஆதாரம்: நஸயீ 1327.
துஆ 1-ன் பொருள் :-
இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.
துஆ 2-ன் பொருள்:-
இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.