கோள் சொல்பவனின் மறுமை நிலை!
——————————————
கோள் சொல்கிறவன் சொர்க்கம் செல்லமாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டுள்ளேன் என்று ஹுதைஃபா(ரலி) கூறினார்கள்

فَقَالَ حُذَيْفَةُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ ‏”‏‏.‏

நூல் : புஹாரி ( 6056 ) முஸ்லிம்
( 180 )
அபூதாவூத் ( 4291 )
*திர்மிதீ ( 2035 ) *
அஹ்மத் (22730 )

மனிதர்களில் சிலர் ,வெட்டிப் பேச்சுக்களைப் பேசி, காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பார்கள் .சிலர் அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசிக் கொண்டிருப்பதையே வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.

ஒருவனிடம் கேட்ட செய்திகளை அடுத்தவனிடம் கூறி இரண்டு நபர்களுக்கு மத்தியில் சண்டையை ஏற்படுத்தி இன்பம் பெறுபவர்களும் பலர் இருக்கின்றனர்.
இப்படிபட்டவர்கள் மறுமையில் சொர்க்கம் செல்ல முடியாது.

பிணக்கு ஏற்பட்டவர்களை இணைக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறும் போது நன்றாக இருப்பவர்களுக்கு மத்தியில் கோள் சொல்லிப் பிரிவினை ஏற்படுத்துவது சரியாகுமா ?
அதனால் தான்…..

நபி ( ஸல் ) அவர்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள்; இல்லையென்றால் வாய்மூடி இருங்கள் என்று கூறியுள்ளார்கள்

நூல்: புஹாரி 6018

எனவே நம் பேச்சால் மற்றவர்கள் நலன் பெற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அடுத்தவர்கள் துன்பம் பெறாமலாவது இருக்க வேண்டும்.

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *