அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 98* ||

*அத்தியாயம் 9 [அத்தவ்பா (பாவ மன்னிப்பு) வசனம் 91- 100 வரை]*

*அத்தியாயம் 9 [அத்தவ்பா (பாவ மன்னிப்பு) வசனம் 91- 100 வரை]*

1)  *தபூக் போரிலிருந்து திரும்பி வரும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த சிலரைப் பற்றி* என்ன கூறினார்? மக்கள் அந்த சொற்றொடருக்கான விளக்கம் கேட்டபோது, நபி (ஸல்) அவர்கள் எப்படி பதிலளித்தார்?

மதீனாவில் மக்கள் சிலர் இருக்கின்றனர். (அவர்களால் உங்களுடன் *புனிதப் போரில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும்) நீங்கள் செல்லும் பாதை, அல்லது நீங்கள் கடந்து செல்லும் பள்ளத்தாக்கு எதுவாயினும் அவர்களும் (தம் உள்ளத்தாலும் எண்ணங்களாலும்) உங்களுடன் இருக்கின்றார்கள்*” என்று சொன்னார்கள்.

மக்கள், “*அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் மதீனாவில்தானே இருக்கிறார்கள்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், *அவர்கள் மதீனாவில்தான் இருக்கின்றார்கள்; அத்தியாவசியக் காரணங்கள்தாம் அவர்களை (இந்தப் புனிதப் போரில் கலந்துகொள்ள விடாமல்) தடுத்து விட்டன. (ஆயினும், அவர்களின் உள்ளங்கள் நம்முடன்தான் உள்ளன*) என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: புகாரி (4423), முஸ்லிம் (3872)

2) *போரில் கலந்து கொள்ளாது இருந்த எவர்கள் மீது குற்றமில்லை?*

(9:91,92) *பலவீனர்கள், நோயாளிகள், (போருக்குச்) செலவிட எதுவும் கிடைக்காதவர்கள் ஆகியோர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உண்மையானவர்களாக நடந்து கொண்டால்* அவர்கள்மீது எந்தக் குற்றமுமில்லை.

*போருக்கு பயணிக்க வாகனம் இல்லாத மக்கள் மீது* எந்த குற்றமும் இல்லை

3) *ஒரு சத்தியம் செய்த பின், அதை விடச் சிறந்ததை காணும் போது, நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு நடப்பார்* என்று கூறினார்கள்?

நபிகளார் எந்த ஒரு வாக்குக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாததை *அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில், சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரம் செய்துவிடுவேன்*” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்கள்: புகாரி (3133), முஸ்லிம் (3386)

_________ _________ _________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *