*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 97* ||

*அத்தியாயம் 9 [அத்தவ்பா (பாவ மன்னிப்பு) வசனம் 81- 90 வரை]*

1)  இந்த பத்து வசனங்களிலும்  *முனாபிஃக்களுக்கு  எச்சரிக்கையாக அல்லாஹ் கூறும் வரிகளை* மட்டும் எழுதவும்.

தபூக் போருக்குச் செல்லாமல் பின்தங்கிய முனாபிஃக்களுக்கு அல்லாஹ் கூறிய எச்சரிக்கை வரிகள்:

1. (9:81) *நரக நெருப்பு இதைவிடக் கடும் வெப்பமானது” என்று கூறுவீராக!

2. (9:82) *அவர்கள் குறைவாக சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும்!”

3. (9:83) *என்னுடன் ஒருபோதும் நீங்கள் புறப்படவே வேண்டாம், என்னுடன் சேர்ந்து எந்த எதிரியிடமும் நீங்கள் போரிட வேண்டாம்.*

4. (9:84) *அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தாதீர், பாவிகளாகவே மரணிக்கட்டும்”

5. (9:85) *அவர்களின் செல்வங்களும் பிள்ளைகளும் உம்மை வியப்பில் ஆழ்த்த வேண்டாம்”

6. (9:87) *அவர்களின் உள்ளங்களில் முத்திரையிடப்பட்டு விட்டது”

7. (9:90) *இறைமறுப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை ஏற்படும்”

2) “உமர் (ரலி) அவர்களின் நாவில் அல்லாஹ் பேசுகிறான்.” என்ற நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்து கூறிய  கூற்றுக்கு ஏற்ப அல்லாஹ்  இறக்கிய குர்ஆன் வசனம் எது?

(9:84) *முனாஃபிக்குகளுக்கு ஜனாஸா தொழுகை வைப்பது சம்பந்தமாக*

நூல்கள்: புகாரி (1366), திர்மிதீ (3022), நஸாயீ (1940), அஹ்மத் (91)

_________ _________ _________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *