*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 96* ||
*அத்தியாயம் 9 [அத்தவ்பா (பாவ மன்னிப்பு) வசனம் 71- 80 வரை]*
*1) நபி (ஸல்) அவர்கள் எந்த முனாஃபிக்கின் ஜனாஸா தொழுகையை நடத்தினார்கள்?*
நயவஞ்சகர்களின் (தலைவன்) *அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல்*
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: புகாரி (1269), திர்மிதீ (3023)
*2) முனாஃபிக்களின் உள்ளங்களில் நயவஞ்சகத்தனத்தை எதற்காக கியாமத் நாள் வரை தொடருமாறு அல்லாஹ் செய்தான்?*
(9:74) *இறைமறுப்பு வார்த்தையைக் கூறிவிட்டு, தாங்கள் கூறவில்லை* என அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்வதும்,
*இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு மறுப்பதும்*
(9:76) *அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியபோது அதில் கஞ்சத்தனம் செய்ததும்*
*அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிக்கு அவர்கள் மாறு செய்ததும்*
*3) எந்தக் கூட்டத்தினருக்கு அல்லாஹ் அருள் புரிகின்றான்?*
(9:71) *இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து; தொழுகையை நிலைநிறுத்தி; ஸகாத்தையும் கொடுத்து; அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுகின்றவர்கள்*
*4) எது மகத்தான வெற்றி என்று அல்லாஹ் கூறுகின்றான்?*
(9:72) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் *சொர்க்கங்களை வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்*. மேலும் நிலையான சொர்க்கங்களில் *தூய்மையான இல்லங்களையும் (வாக்களித்துள்ளான்.) அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது*.
_________ _________ _________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*