*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 95* ||
*அத்தியாயம் 9 [அத்தவ்பா (பாவ மன்னிப்பு) வசனம் 61- 70 வரை]*
1) *திருப்திப்படுத்துவதற்கு மிகத் தகுதியுடையோர்கள்* யார்?
(9:62) *அல்லாஹ்வும் அவனது தூதருமே மிகத் தகுதியானவர்கள்.*
2) *முனாஃபிக்குகள் எதற்கு அஞ்சினார்கள்?*
(9:64) *இறைநம்பிக்கையாளர்கள் மீது ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கியருளப்பட்டு, அது தம்முடைய உள்ளங்களில் உள்ளவற்றை அவர்களுக்கு வெளிப்படுத்திவிடுமோ* என்று முனாஃபிக்குகள் அஞ்சினார்கள்.
3) அல்லாஹ் *நபியின் தன்மையாக* எதையெல்லாம் கூறுகிறான்?
(9:61) அவர் *மக்களுக்காக நன்மையானதைச் செவியுறுகிறார்;
அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொள்கிறார்;
இறைநம்பிக்கையாளர்களை உண்மைப்படுத்துகிறார்;
இறைநம்பிக்கை கொண்டோருக்கு அருளாக இருக்கிறார்*
4) *நஷ்டவாளிகள் என யாரை அல்லாஹ் குறிப்பிடுகிறான்?*
(9:69) அல்லாஹ் வழங்கிய *அதிகமான செல்வங்களும், பிள்ளைகளும் அவர்களுக்கு கொடுத்தபின்பும், நற்பேறுகளை அனுபவித்த வண்ணம், வீணானவற்றில் மூழ்கிய நயவஞ்சகர்களின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்துவிட்டன* அவர்களே நஷ்டவாளிகள்.
5) முன்பிருந்த நபிமார்களின் சமுதாயம் (அழிக்கப்பட்ட) பற்றிய செய்தியை அல்லாஹ் கூறுவதான் நோக்கம் என்ன?*
*எச்சரிக்கை மற்றும் படிப்பினை*
// (9:70) முன்பிருந்த நபிமார்களின் சமுதாயங்கள் அல்லாஹ்வின் தூதர்களின் அறிவுறுத்தல்களை புறக்கணித்ததால் இறுதியில் அழிவுக்கு ஆளானார்கள். இந்தச் செய்தி மூலம் அல்லாஹ் நம்மை எச்சரிக்கிறான்..//
*இறைக்கட்டளைகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகளை உணர்த்தி, நல்வழியில் வாழ்வதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. இது மனிதர்களை நேர்வழிப்படுத்தவும், இறைவனின் அருளையும் தண்டனையையும் உணரச் செய்யவும் உதவுகிறது*
_________ _________ _________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*