அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
*அத்தியாயம் 9 [அத்தவ்பா (பாவ மன்னிப்பு) வசனம் 31- 40 வரை]*
|| *கேள்வி 92* ||
1) தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாதிருப்பவரின் மறுமை நிலை எப்படி இருக்கும்?
(9:34) அவர்களுக்குத் *துன்புறுத்தும் வேதனை உண்டு*
மறுமை நாளில் *நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப் புறத்திலும், நெற்றியிலும், முதுகிலும் சூடு போடப்படும்*. அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ச்சிய பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒருநாள் (முழுவதும்) அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒருநாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (1803)
2) ஸவ்ர் குகையில் நபியுடன் இருந்த நபித்தோழர் யார்? அப்போது, எதிரிகளை கண்டு கவலை கொண்ட தோழரை எந்த இறைவசனத்தை கூறி நபி அவர்கள் ஆசுவாசப்படுத்தினார்கள்?
*அபூபக்ர்* (ரலி) அவர்கள்
(9:40) *நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்*” என்று அவர், தம் தோழருக்குக் கூறியபோது அல்லாஹ் தனது அமைதியை அவர்மீது இறக்கி, நீங்கள் பார்க்காத படைகள் மூலம் அவரைப் பலப்படுத்தினான்.
3) *இவ்வுலக வாழ்வை அல்லாஹ் மறுமை வாழ்வுடன்* எவ்வாறு ஒப்பிடுகிறான்?
நமது இந்த(ச் சுட்டு) *விரலைக் கடலில் வைக்கும்போது அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக் கொள்கிறதோ* அந்தளவிற்கு இவ்வுலகம் அர்ப்பமானதாக ஒப்பிடப்படுகிறது
அறிவிப்பவர்: முஸ்தவ்ரித் (ரலி), நூல்கள்: முஸ்லிம் (5490), திர்மிதீ (2245), இப்னு மாஜா (4098), அஹ்மத் (17322)
4) தீய செயல்கள் யாருக்கு அழகாக்கப்பட்டு விட்டன?
(9:37) *இறைமறுப்பாளர்களுக்கு*
5) அல்லாஹ்வின் பதிவேட்டில் புனித மாதங்கள் எந்தனை ? எவை? (புஹாரி ஹதீஸில் (4655 – 4665) தேடவும்.)
*துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ரஜப்* மாதமாகும்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி), நூல்கள்: புகாரி (3197), முஸ்லிம் (3467)
_________ _________ _________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*