*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

*அத்தியாயம் 9 [அத்தவ்பா (பாவ மன்னிப்பு) வசனம் 21- 30 வரை]*

|| *கேள்வி 91* ||

1) *ஈமானின் சுவை உணர்ந்தவரின் தன்மைகள் என்ன?*

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவரிடம் *மூன்று தன்மைகள்* அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். (அவை:)

1. *ஒருவருக்கு மற்ற எதையும்விட அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அதிக நேசத்திற்குரியோராவது*

2. *ஒருவர், மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.*

3. *இறைமறுப்புக்கு மாறுவதை, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் வெறுப்பது.*

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: புகாரி (16), முஸ்லிம் (67)

2) ஹுனைன் போரில் நபி (ஸல்) அவர்கள் எங்கு அமர்ந்திருந்த *வெண்ணிறக் கோவேறு கழுதையின்* பெயர் என்ன? அதை *யார் அன்பளிப்பாக கொடுத்தார்கள்?*

ஹுனைன் போரின் போது, நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த வெண்ணிறக் கோவேறு கழுதையின் பெயர் *பைளா* அதை அன்பளிப்பாக கொடுத்தவர் *ஃபர்வா பின் நுஃபாஸா அல்ஜுதாமீ (ரலி) அவர்கள்*.

அறிவிப்பவர்: அபூஇஸ்ஹாக், நூல்கள்: புகாரி (2864), முஸ்லிம் (3642)

அறிவிப்பவர்: அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (3639).

3) அல்லாஹ் கூறும் *மகத்தான  தகுதிக்குரியோருக்கு அவனிடமிருந்துள்ள நற்செய்தி என்ன ?*

(9:21,22) *தனது அருளையும், பொருத்தத்தையும், சொர்க்கங்களையும்* (தருவதாக) அவர்களின் இறைவன் அவர்களுக்கு நற்செய்தி கூறுகிறான் அங்கு அவர்களுக்கு *நிரந்தரமான இன்பமும்* இருக்கிறது. அதில் அவர்கள் எப்போதும் நிரந்தரமாக இருப்பார்கள்.

4) *ஹுனைன் போரில் இறைமறுப்பாளர்களை அல்லாஹ்* எவ்வாறு  வேதனை செய்தான்?

(9:26) ……. *கண்ணுக்குத் தெரியாத படைகளையும் (உதவிக்காக) இறக்கி வைத்து* இறைமறுப்பாளர்களை வேதனை செய்தான்.

5) இறைமறுப்பாளர்களின் கூறும் கூற்று எவர்களின் சொல்லுக்கு ஒத்து இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்? அது என்ன?*

( 9:30) இவர்களுக்கு முன்னர் இறைநிராகரிப்பை மேற்கொண்டிருந்தவர்களின் கூற்றுக்கு ஒத்து இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

யூதர்கள், *உஸைர் அல்லாஹ்வுடைய மகன்*’ என்றும்,  கிறித்தவர்கள், ‘*மஸீஹ் அல்லாஹ்வுடைய மகன்*’ என்று கூறும் கூற்றாகும்.

_________ _________ _________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *