*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
*அத்தியாயம் 9 [அத்தவ்பா (பாவ மன்னிப்பு) வசனம் 11- 20 வரை]*
|| *கேள்வி 90* ||
1) அல்லாஹ்வின் பள்ளிவாயில்களை நிர்வகிக்கத் தகுதியானவர்கள் யார்?
(9:18) *அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ*, அவர்கள்தான் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் பராமரிக்கத் தகுதியுடையவர்கள்.
2) அல்லாஹ் கூறும் *வெற்றியாளர்கள் யார்?*
(9:20) *இறைநம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, தமது செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டோரே* அல்லாஹ்விடம் மகத்தான தகுதிக்குரியோர்; அவர்களே வெற்றியாளர்கள்.
3) (9 :19) இந்த வசனம் எதை *நமக்கு உணரச் செய்கிறது?*
*இறைநம்பிக்கையுடன் செய்பவர்கள் மட்டுமே அல்லாஹ்வின் அருளைப் பெறுகிறார்கள்*.
*ஒரு செயலின் மதிப்பு அதன் பின்னால் உள்ள நம்பிக்கையைப் பொறுத்தது*
*அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது மிக உயர்ந்த வணக்கமாக கருதப்படுகிறது*
*இறைநம்பிக்கை இல்லாமல் செய்யப்படும் எந்த நற்செயலும் அல்லாஹ்விடம் மதிப்பற்றது*
*அல்லாஹ் அநியாயக்காரர்களை நேர்வழியில் செலுத்த மாட்டான்*
4) *இறைமறுப்பாளர்கள் எப்போது மார்க்க சகோதரர்கள் ஆகமுடியும்*?
(9:11) அவர்கள் *நிராகரிப்பிலிருந்து விலகி அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து* வந்தால்தான் மார்க்க சகோதரர்கள் ஆகமுடியும்
______________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*