அத்தியாயம் *8 [அல்அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள்)* வசனம் *51- 60* வரை]
|| *கேள்வி 86* ||
1 ) பூமியில் நடமாடும் படைப்புகளிலேயே *அல்லாஹ்விடத்தில் மிகவும் மோசமானவர்கள்* யார்?
\\*இறைமறுப்பாளர்கள்*\\
(7:55) *அல்லாஹ்விடம் உயிரினங்களில் மிகக் கெட்டவர்கள் இறைமறுப்பாளர்களே*! அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
2 ) *உடன்படிக்கையை முறிப்பதற்கான அளவுகோல்* என்ன?
\\*நம்பிக்கை துரோகம்/மோசடி* செய்யாதவரை\\
(8:58) ஏதேனும் ஒரு கூட்டத்தாரின் *துரோகத்திற்கு நீர் பயந்தால், அவர்களிடம் (செய்த உடன்படிக்கையை) அதே அளவில் எறிந்து விடுவீராக*! அல்லாஹ், துரோகிகளை நேசிக்க மாட்டான்.
3 ) إِنَّ ٱللَّهَ قَوِىٌّۭ شَدِيدُ ٱلْعِقَابِ* (8:52)* மொழிபெயர்ப்பு செய்க?
*அல்லாஹ் மிக வலிமையானவன்; தண்டிப்பதில் கடுமையானவன்*.
________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا