*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
அத்தியாயம் *8 [அல்அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள்)* வசனம் *31- 40* வரை]
|| *கேள்வி 84* ||
1 ) *இஸ்லாத்தை தழுவினால்* முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுமா?
*ஆம்*
(8:32) அவர்கள் விலகிக் கொண்டால் *முன்னர் செய்தவை அவர்களுக்கு மன்னிக்கப்படும்*
அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் *அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை ஊட்டினான்*. …….. நபி (ஸல்) அவர்கள், *முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்து விடும்*…. நூல்: முஸ்லிம் (192)
2 ) அபூ ஜஹ்ல் வேதனையை வேண்டிய போது, அல்லாஹ் அவர்களை *உடனடியாக தண்டிக்காமல் இருக்க கூறிய இரண்டு காரணங்கள்* என்ன?
(1) *நபி(ஸல்) அவர்கள் அவர்களிடையே இருந்தார்கள்*
(2) *அவர்களில் சிலர் அல்லாஹுவிடம் பாவமன்னிப்பு கோரிக்கொண்டிருந்தனர்*
(8:33) (நபியே!) *நீர் அவர்களுடன் இருக்கும் நிலையில்* அவர்களை அல்லாஹ் வேதனை செய்பவனாக இல்லை. *அவர்கள் பாவ மன்னிப்புத் தேடும் நிலையிலும்* அவர்களை அல்லாஹ் வேதனை செய்பவனாக இல்லை.
3 ) *இறைமறுப்பாளர்கள் தங்கள் செல்வத்தை எதற்காகப் பயன்படுத்துகிறார்கள்*?
(8:36) *அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக இறைமறுப்பாளர்கள் தமது செல்வங்களைச் செலவிடுகின்றனர்*.
____________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*