*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

அத்தியாயம் *8 [அல்அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள்)* வசனம் *22- 30* வரை]

|| *கேள்வி 83* ||

1 ) *நமது தீமைகளை அல்லாஹ் அழிக்க* நாம் செய்ய வேண்டியது என்ன?

அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.

(8:29) இறைநம்பிக்கை கொண்டோரே! *நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்தால்* அவன் (நன்மை, தீமையைப்) பிரித்தறியும் நேர்வழியில் உங்களை ஆக்குவான். *உங்களை விட்டும் உங்கள் தீமைகளை அழிப்பான்*. உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகத்தான அருளை உடையவன்.

2 ) மனிதன் எதையும் *அல்லாஹ்வின் அருளின்றி செய்யும் ஆற்றல் பெறவில்லை* என்பதை வலியுறுத்தும் வசனத்தை எழுதுக?

(8:22) அவர்களிடம் அல்லாஹ் ஏதேனும் *நன்மையை அறிந்திருந்தால் அவர்களைச் செவியேற்கச் செய்திருப்பான்*. அவர்களை அவன் செவியேற்கச் செய்திருந்தாலும் அவர்கள் புறக்கணித்தோராகத் திரும்பிச் சென்றிருப்பார்கள்.

(8:24) மனிதனுக்கும், அவனுடைய *இதயத்திற்கும் மத்தியில் சூழ்ந்து (செயலாற்றிக் கொண்டு) இருக்கிறான்,  (ஆகவே, மனிதன் எதையும் அல்லாஹ்வின் அருளின்றி செய்யும் ஆற்றல் பெறமாட்டான்) என்பதையும்*, அவனிடமே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்

(8:26) நீங்கள் சிறுபான்மையினராகவும், பூமியில் பலவீனர்களாகவும், பிற மக்கள் உங்களைச் சூறையாடி விடுவார்கள் எனப் பயந்து கொண்டும் இருந்தபோது, *அவன் உங்களுக்கு அடைக்கலம் தந்து, தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தி, தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்ததை நினைத்துப் பாருங்கள்!* இதனால் நீங்கள் நன்றி செலுத்துவோர் ஆகலாம்.

3 ) எது *நமக்கு சோதனையாக* இருக்கின்றன?

(8:28) உங்கள் *செல்வங்களும்* உங்கள் *பிள்ளைகளும்* சோதனை என்பதையும், அல்லாஹ்விடமே மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *