*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 79* ||
அத்தியாயம் *7 [அல்அஃராஃப் (சிகரங்கள்)* வசனம் *191- 200* வரை]
1 ) *சமாதி/தர்கா/சிலை வழிபாட்டை கண்டிக்கும்* வசனங்களை பதிவு செய்க?
(7:191) இவர்களுக்கு எந்த *உதவியும் செய்ய அவர்கள் சக்தி பெற மாட்டார்கள்*.
(7:194) அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரைப் பிரார்த்திக்கிறீர்களோ, *அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே!*
(7:194) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களைப் பிரார்த்தியுங்கள்! *அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும்!*
(7:195) உங்களுடைய இணைக்கடவுள்களை அழையுங்கள்! *பின்னர் எனக்கு (எதிராக)ச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்*!” என்று (நபியே!) கூறுவீராக!
2 ) *கற்பனை தெய்வங்களை* (அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கப்படும்) பற்றி குறிப்பு எழுதுக?
(7:191) *அவர்களே படைக்கப்படுகின்றனர்.*
(7:195) *நடக்கும் கால்கள் அவர்களுக்கு உண்டா? அல்லது பிடிக்கும் கைகள் அவர்களுக்கு உண்டா? அல்லது பார்க்கும் கண்கள் அவர்களுக்கு உண்டா? அல்லது கேட்கும் காதுகள் அவர்களுக்கு உண்டா*?
(7:197) *தமக்கே அவர்களால் உதவவும் முடியாது.*
___________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*