*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 78* ||
அத்தியாயம் *7 [அல்அஃராஃப் (சிகரங்கள்)* வசனம் *181- 190* வரை]
1 ) எவர்களை அல்லாஹ் *தவறான வழியில் விட்டு விடுகிறானோ* அவர்களை நேரான வழியில் செலுத்த முடியுமா?
\\*முடியாது*\\
(7:186) யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விட்டானோ *அவனுக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.*
2 ) மனிர்களுடைய இணைவைப்புச் செயல்களிலிருந்து அல்லாஹ் *மிகவும் உயர்ந்தவன்/தூய்மையானவன்* ஆவான்.
3 ) மனிதன் *எதை பெறுவதற்கு?* கணவன் மனைவி குடும்ப உறவை ஏற்படுத்தியதாக அல்லாஹ் கூறுகிறான்?
மனிதன் *மன அமைதி/ நிம்மதி* பெறுவதற்கு கணவன் மனைவி குடும்ப உறவை ஏற்படுத்தியதாக கூறுகிறான்
(7:189) அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் *மன அமைதி/ நிம்மதி பெறுவதற்காகப்* படைத்தான்.
4 ) *ஒட்டுமொத்த மனித வர்க்கமும் ஒரே தாய் தந்தையிலிருந்து உருவானாதாக* கூறப்படும் வசனத்தை எழுதுக?
(7:189) அவனே *ஒரேயொரு மனிதரிலிருந்து* உங்களைப் படைத்தான்.
________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*