*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 73* ||
அத்தியாயம் *7 [அல்அஃராஃப் (சிகரங்கள்)* வசனம் *131- 140* வரை]
1 ) *இஸ்ராயீலின் சந்ததிகள் ஃபிர்அவ்னால் ஏற்பட்ட கஷ்டங்களை பொறுமையுடன் சகித்துக் கொண்டமையால்* கிடைத்த வெகுமதி என்ன?
*\\அல்லாஹ் அந்த மக்களுக்கு மிக்க பாக்கியமுள்ள (அவர்களுடைய) பூமியின் கிழக்குப் பாகங்களையும், மேற்குப் பாகங்களையும் சொந்தமாக்கிக் கொடுத்தான்\\*
(7:137) நாம் அருள்வளம் புரிந்த அப்பூமியின் *கிழக்குப் பகுதிகளுக்கும், மேற்குப் பகுதிகளுக்கும், பலவீனர்களாக்கப்பட்ட அச்சமுதாயத்தை வாரிசுகளாக்கினோம்*. இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் பொறுமையாக இருந்ததால்…
2 ) *இஸ்ராயீலின் சந்ததிகளை மூஸா நபியுடன் அனுப்ப அவர்கள் வைத்த கோரிக்கை* என்ன?
\\*அவர்களுக்கு சிரமம் ஏற்படும் போதெல்லாம் மூஸா நபியிடம் அதை நீக்க அல்லாஹ்விடம் துஆ செய்ய சொல்லுவார்கள்*\\
(7:134) மூஸாவே! உமது இறைவன் உமக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அவனிடம் எங்களுக்காகப் பிரார்த்திப்பீராக! *எங்களை விட்டும் நீர் இவ்வேதனையை நீக்கி விட்டால்* உம்மீது நம்பிக்கை கொள்வோம். உம்முடன் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை அனுப்பி விடுவோம்” என அவர்கள் கூறினர்.
3 ) *அல்லாஹ் கண்டிக்கின்ற பாரதூரமான நான்கு விஷயங்களை* மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டுள்ளனர் அதில் ஒன்றை குறிப்பிடுக?
*\\பிற மதத்தவர்களுக்கு இருக்கும் பல கடவுள்கள் போல தங்களுக்கும் எற்படுத்தித் தருமாறு கேட்டனர்!*\\
(7:138) மூஸாவே! *அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக*!” என்று கேட்டனர். *நீங்கள் அறிவுகெட்ட கூட்டமாகவே இருக்கின்றீர்கள்*” என்று அவர் கூறினார்.
_______________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*