*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 72* ||

அத்தியாயம் *7 [அல்அஃராஃப் (சிகரங்கள்)* வசனம் *111- 120* வரை]

1 ) *மூஸா நபியின் அற்புதம் மூலம் சூனியக்காரர்கள் அறிந்து கொண்டது* என்ன?

தங்களின் *சூனியம் போலி என்பதையும், அது வெறும் கண்கட்டு வித்தை மட்டுமே* என்பதையும் உணர்ந்தார்கள்

மூஸா நபி செய்த *அற்புதத்தை* கண்டு…

அது *இறைவனின் உண்மையான வல்லமையால் நடந்தது* என்பதை புரிந்து கொண்டார்கள்

*மனிதனால் செய்ய முடியாத ஒன்று* என்பதை புரிந்தனர்

இது *இறைவனின் மாபெரும் சக்தி என்பதை ஏற்றுக்கொண்டனர்*

உடனடியாக *சஜ்தாவில் விழுந்தனர்*

*பகிரங்கமாக ஈமான் கொண்டதாக அறிவித்தனர்*

*ஃபிர்அவனின் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தவில்லை*

(7:121) *அகிலங்களின் இறைவனை நாங்கள் நம்பினோம்* என்று கூறினர்.

(7:122) *மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் இறைவன்* (என்றும் கூறினர்).

(20:72) *எங்களிடம் வந்துள்ள தெளிவான சான்றுகளைவிடவும், எங்களைப் படைத்தவனைவிடவும் உன்னை நாங்கள் தேர்ந்தெடுக்க மாட்டோம். எனவே, நீ தீர்ப்பளிக்க வேண்டியதைத் தீர்ப்பளித்துக் கொள். நீ தீர்ப்பளிப்பதெல்லாம் இந்த உலக வாழ்க்கையில்தான்*!” என அவர்கள் கூறினர்.

(20:73) *எங்கள் தவறுகளையும், நீ எங்களை நிர்ப்பந்தித்து செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் எங்களை மன்னிப்பதற்காக அவனை நாங்கள் நம்பினோம். அல்லாஹ் மிக்க மேலானவன்; நிலைத்திருப்பவன்*” (என்றும் கூறினர்.)

(7:125,126) *எங்கள் இறைவனிடமே நாங்கள் திரும்பிச் செல்வோர். எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்தபோது அவற்றின்மீது  நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்பதற்காகவே தவிர நீ எங்களைப் பழிவாங்கவில்லை!* என அவர்கள் கூறினர். *எங்கள் இறைவனே! எங்கள்மீது பொறுமையைப் பொழிவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!* (என்று பிரார்த்தித்தனர்.

___________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *