*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 71* ||

அத்தியாயம் *7 [அல்அஃராஃப் (சிகரங்கள்)* வசனம் *101- 110* வரை]

1 ) *மூஸா நபி செய்த அற்புதம்* என்ன?

(9:107,108) *கைத்தடி உண்மையான பாம்பாக மாறியதும், தமது கையை (அக்குள் பகுதியிலிருந்து) வெளியே எடுத்தபோது பார்ப்போருக்கு வெண்மையாக இருந்ததும்*

2 ) *சத்தியத்தை மறுப்போரின் உள்ளங்கள் மீது* அல்லாஹ் ஏன் முத்திரையிடுகின்றான்?

\\*இறைச் செய்தியை பொய்யெனக் மறுத்து இறைநம்பிக்கை கொள்ளாததால்*\\

(7:101) ஆயினும் ஏற்கனவே அவர்கள் *பொய்யெனக் கூறிக் கொண்டிருந்ததால் இறைநம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை*. இவ்வாறே *இறைமறுப்பாளர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிடுகிறான்.*

3 ) *மூஸா நபியின் அற்புதத்தை கண்ட ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள்* என்ன கூறினார்கள்?

(7:109) *இவர் திறமைமிக்க சூனியக்காரரே!* என்று கூறினார்கள்.

______________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *