*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 70* ||

அத்தியாயம் *7 [அல்அஃராஃப் (சிகரங்கள்)* வசனம் *91- 100* வரை]

1 ) அல்லாஹ்வின் *எந்த நிபந்தனையின் மூலம்* அம்மக்கள் அடைந்திருக்க முடியும். …

//*வானம் மற்றும் பூமியிலிருந்து அருள்வளங்களை அவர்களுக்குத் திறந்து விட்டிருப்போம்.*//

\\*இறைநம்பிக்கை கொண்டு அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்திருந்தால்*\\

(7:96) *இறைநம்பிக்கை கொண்டு இறையச்சத்துடன் நடந்திருந்தால்*, வானம் மற்றும் பூமியிலிருந்து அருள்வளங்களை அவர்களுக்குத் திறந்து விட்டிருப்போம்.

2 ) *அல்லாஹ் மக்களை எவ்வாறு சோதித்தான்?*

//*வறுமையாலும் நோயாலும், துன்பத்தை இன்பமாய் மாற்றி*//

(7:94) அவர்களை *வறுமையாலும் நோயாலும் பிடிக்காமல்* இருந்ததில்லை.

(7:95) அவர்களின் *துன்பத்தை இன்பமாய் மாற்றினோம்*. எந்த அளவுக்கு எனில் அவர்கள் இன்ப நலத்தில் நன்கு திளைத்து, *எங்களின் முன்னோர்களுக்குங்கூட துன்பமும் இன்பமும் ஏற்பட்டுக் கொண்டுதானிருந்தன* என்று கூறினார்கள்.

3 ) *அல்லாஹ் இறைத்தூதர்களை அனுப்பியதன்* நோக்கம் என்ன?

\\மக்கள் *அல்லாஹ்வுக்கு பணிந்து நடக்க வேண்டும்* என்பதற்காக\\

(7:94) நாம் எந்த ஊருக்கு ஒரு நபியை அனுப்பி வைத்தாலும், அவ்வூர்வாசிகள் *பணிந்து நடக்க வேண்டும்*

4 ) *நிலநடுக்கத்தால் அழிக்கப்பட்ட சமுதாயம்* எது?

*மத்யன்வாசிகளான* (ஷுஐப் நபி சமுதாயம்)

________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *