*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 69* ||
அத்தியாயம் *7 [அல்அஃராஃப் (சிகரங்கள்)* வசனம் *81- 90* வரை]
1 ) இறைமறுப்பாளர்களுக்கு எடுத்துக்காட்டாக *இந்த இரண்டு தூதர்களின் மனைவியை அல்லாஹ் முன்னுதாரணமாக* எடுத்துரைக்கிறான்.? அவர்கள் யார்?
(66:10) இறைமறுப்பாளர்களுக்கு எடுத்துக்காட்டாக *நூஹின் மனைவியையும், லூத்தின் மனைவியையும்* அல்லாஹ் எடுத்துரைக்கிறான்.
(7:83) அவரையும் அவரது குடும்பத்தினைரையும் காப்பாற்றினோம். *அவரது மனைவியைத் தவிர! அவள் (வேதனையில்) தங்கிவிடுவோரில் ஆகி விட்டாள்.*
2 ) *லூத் நபியின் சமுதாயம் எவ்வாறு அழிக்கப்பட்டனர்?*
(7:84) அவர்கள் மீது *(கல்) மழையை பொழிந்து (அவர்களை அழித்து) விட்டோம்*. ஆகவே, (இக்)குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) கவனிப்பீராக.
3 ) *மக்களுக்கு நேர்மையான வணிகத்தை* அறிவுறுத்திய நபி யார்?
(7:85) ‘மத்யன்’ (என்னும்) நகரத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ‘*ஷுஐபை*’ (நம் தூதராக அனுப்பிவைத்தோம்……
…..*அளவை முழுமையாக அளந்து எடையை சரியாக நிறுங்கள். (நீங்கள் கொடுக்க வேண்டிய) மனிதர்களுடைய பொருள்களில் எதையும் குறைத்து விடாதீர்கள்*….
4 ) *ஷுஐப் நபி செய்த பிரார்த்தனை என்ன?*
(7:89) *எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்கள் சமுதாயத்திற்குமிடையே உண்மையைக் கொண்டு தீர்ப்பளிப்பாயாக! நீயே தீர்ப்பளிப்போரில் மிகச் சிறந்தவன்*” (என்றும் கூறினார்.)
__________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*