*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 68* ||

அத்தியாயம் *7 [அல்அஃராஃப் (சிகரங்கள்)* வசனம் *71- 80* வரை]

1 ) இதற்கு முன்னர் *உலகத்தில் எவருமே செய்திராத மானக்கேடானதொரு காரியத்தை* செய்த சமுதாயம் எது?

(7:80) லூத் நபி சமுதாயம்

2 ) *வேரறுக்கப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்களாக இல்லை*?

( 7:72) அவர்கள் *இறைநம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.*

3 ) *அல்லாஹ்வின் பெண் ஒட்டகம்* (نَاقَةُ اللّٰهِ) குறித்து என்ன கூறப்பட்டது?

(7:73) *அதை விட்டு விடுங்கள்! அது அல்லாஹ்வின் பூமியில் மேயட்டும்! அதற்குத் தீங்கிழைத்து விடாதீர்கள்! அவ்வாறு செய்தால் துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்* என்று கூறப்பட்டது

4 ) *மலைகளைக் குடைந்து வீடுகளை கட்டிய சமுதாயம்* எது?

*ஸமூது* சமுதாயம் (ஹிஜ்ர்வாசிகள்)

( 7:74) அதன் சமவெளிப் பகுதிகளில் மாளிகைகளைக் கட்டுகிறீர்கள். மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்கள்.

(15:82) அவர்கள் அச்சமற்றோராக இருந்த நிலையில், *மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டனர்*.

5 ) *நிலநடுக்கத்தால் அழிக்கப்பட்ட சமுதாயம்* எது?

*(ஸமூது சமுதாயமான) ஹிஜ்ர்வாசிகள்*

(7:78) எனவே அவர்களை *பூகம்பம் பிடித்துக் கொண்டது*. அவர்கள் தமது வீடுகளில் முகம் குப்புற வீழ்ந்து கிடந்தனர்.

(15:83) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தபோது அவர்களைப் *பெரும் சப்தம் தாக்கியது.*

கூடுதல் தகவலாக…

(ஸமூது சமுதாயமான) *ஹிஜ்ர்வாசிகள் தூதர்களைப் பொய்யரெனக் கூறினர்*. (15:80)

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் பிரதேசத்தைக் கடந்து சென்ற பொழுது, *அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்த அதே தண்டனை உங்களுக்குக் கிடைத்து விடுமோ என்றஞ்சி அழுதபடியே அல்லாது (அதில்) நுழையாதீர்கள்* என்று சொன்னார்கள்.

பிறகு அவர்கள் *சேண இருக்கையின் மீது அமர்ந்தபடியே தம் போர்வையால் (தம்மை) மறைத்துக் கொண்டார்கள்*.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: புகாரி (3380), முஸ்லிம் (5700)

_______________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *