*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 67* ||
அத்தியாயம் *7 [அல்அஃராஃப் (சிகரங்கள்)* வசனம் *61- 70* வரை]
1 ) *உடல் பலத்தில் உலகில் அவர்களைப் போல் யாரும் படைக்கப்படவில்லை?. அவர்கள் யார்?*
\\*ஆது சமுதாயம்*\\
7:69 *உங்களுக்கு உடலில் வலிமையை அதிகரித்ததையும்* நினைத்துப் பாருங்கள்!
89:8 *அவர்களைப் போலொரு சமுதாயம் எந்த ஊரிலும் படைக்கப்படவில்லை.*
2 ) *தன் சமுதாயாத்தாரிடம் இவ்வாறு பிரார்த்தித்த* நபி யார்?
*\\ஹூது நபி*\\
7:65 ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். *என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. நீங்கள் (அவனை) அஞ்ச மாட்டீர்களா?* என்று கேட்டார்.
3) *நூஹ் நபியுடைய சமூகத்தாருக்குப் பின்னர்* ஏற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் யார்?
7:69 *ஆது சமுதாயத்தினர்*
4 ) *நபி எச்சரித்த வேதனையை தங்களிடம் கொண்டு வருமாறு* கேட்ட சமுதாயத்தினர் யார்?
*\\ஆது சமுதாயத்தினர்*\\
7:70 *நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு எச்சரித்ததை எங்களிடம் கொண்டு வாரும்*” என்று அவர்கள் கூறினர்.
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*