*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 66* ||

அத்தியாயம் *7 [அல்அஃராஃப் (சிகரங்கள்)* வசனம் *51- 60* வரை]

1 ) *நூஹ் நபி அவர்கள் தன் சமுதாயத்தவரிடம்* என்ன கூறி எச்சரித்தார்கள்?

\\*அந்நாளின் வேதனையை கூறி எச்சரித்தார்கள்*\\

(7:59) *என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. உங்களுக்கு மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்*

2 ) *அல்லாஹ் இறந்தோரை உயிர்ப்பித்து எழுப்புவது* எதனுடன் ஒப்பிடுகிறான்?

\\*அல்லாஹ் வறண்ட நிலத்தில் மழையின் மூலம் உயிரூட்டி எவ்வாறு விளைச்சலை ஏற்படுத்துகிறானோ அதுபோல*\\

(7:57) அவனே தனது (மழையெனும்) அருளுக்கு முன் நற்செய்தியாகக் காற்றுகளை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமந்ததும் அதை *வறண்ட நிலத்திற்கு ஓட்டிச் சென்று, அங்கு மழையைப் பொழியச் செய்கிறோம். அதன் மூலம் அனைத்து வகை விளைச்சல்களையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தோரை (உயிர்ப்பித்து) எழுப்புவோம்*. இதனால் நீங்கள் படிப்பினை பெறுவீர்கள்.

3 ) *அல்லாஹ்விடம் எவ்வாறு பிரார்த்திக்க வேண்டும்?*

(7:55-56) *பணிவாகவும், இரகசியமாகவும் அச்சத்துடனும் ஆவலுடனும் பிரார்த்தனை செய்ய வேண்டும்*

________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *