*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 65* ||

அத்தியாயம் *7 [அல்அஃராஃப் (சிகரங்கள்)* வசனம் *41- 50* வரை]

1 ) எதிரிக் கூட்டத்தினர் எவரிடமாவது நபி (ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் *எத்தனை நாட்கள்* தங்கிச் செல்வது அவர்களின் வழக்கமாக இருந்து வந்தது?

*மூன்று நாட்கள்*

அறிவிப்பவர்: அபூ தல்ஹா (ரலி), நூல்கள்: புகாரி (3976)

2 ) *சொர்க்கவாசிகளின் பண்புகள்* யாவை?

(7:43) (இவ்வுலகில் ஒருவரைப்பற்றி மற்றவருக்கு இருந்த) *குரோதத்தை/காழ்ப்புணர்வை* அவர்களுடைய உள்ளங்களிலிருந்து அல்லாஹ் நீக்கிவிடுகிறான்

*நோய்வாய் படாமல் ஆரோக்கியத்துடன் இருப்பது*

*மரணிக்காமல் உயிரோடும் முதுமை ஏற்படாமல் இளமையாக இருப்பது*

*துன்பம் இல்லாமல் இன்பமாக இருப்பது* ஆகியவை

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்கள்: முஸ்லிம் (5457), திர்மிதீ (3169), அஹ்மத் (11469)

3 ) *சொர்க்கவாசி ஆவதற்குறிய நிபந்தனைகள்* என்ன?

(7:42) *நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே* சொர்க்கவாசிகள்.

4 ) *சிகரங்களில் உள்ளவர்கள் கேட்ட பிரார்த்தனை* என்ன?

(7:48). *எங்கள் இறைவா! எங்களை அநீதி இழைத்த கூட்டத்துடன் சேர்த்து விடாதே!* எனக் பிரார்த்திப்பார்கள்.

________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *