*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 63* ||
அத்தியாயம் *7 [அல்அஃராஃப் (சிகரங்கள்)* வசனம் *21- 30* வரை]
1 ) *மனித கண்களுக்கு ஜின் இனத்தார் தென்பட மாட்டார்கள்* என்பதை கூறும் வசனத்தை எழுதுக ?
7:27 ……*நீங்கள் அவர்களைக் காணாத வகையில்* அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்…..
2 ) எந்த பிரார்த்தனையை *புத்தாடை அணியும்போது* நபிகளார் காட்டித்தந்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் புத்தாடை அணியும்போது தலைப்பாகை, சட்டை என்று அந்த ஆடையின் பெயரைக் கூறிவிட்டு, ‘*அல்லாஹும்ம லகல் ஹம்து. அன்த கஸவ்தனீஹி, அஸ் அலுக ஹைரகு வஹைர மாஸுனிஅ லஹு. வ அவூது பிக மின் ஷர்ரிஹி வ ஷர்ரி மாஸுனிஅ லஹு* என்று கூறுவார்கள்.
பொருள்: *அல்லாஹ்வே! இந்த ஆடையை எனக்கு அணிவித்த உனக்கே புகழ் அனைத்தும். இந்த ஆடையின் நன்மையையும் இது எதற்காகத் தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் உன்னிடம் கேட்கிறேன். இதனுடைய தீமையையும் இது எதற்காகத் தயாரிக்கப்பட்டதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்*.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி), நூல்கள்: திர்மிதீ (1689), அபூதாவுத் (3504)
3 ) ஆதம் நபியும் அவரது மனைவியும் தங்களுடைய தவறை உணர்ந்து *அல்லாஹுவிடம் கேட்ட பாவமன்னிப்பு பிரார்த்தனையை* பதிவு செய்க?
(7:23) *எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே அநியாயம் செய்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியாவிட்டால் நாங்கள் நஷ்டமடைந்தோரில் ஆகி விடுவோம்* என இருவரும் கூறினர்.
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*