*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 61* ||
அத்தியாயம் *7 [அல்அஃராஃப் (சிகரங்கள்)* வசனம் *1- 10* வரை]
1 ) *இறைச்செய்தி விஷயத்தில் அநீதியாக நடந்து கொண்டவர்களின்* மறுமை நிலை என்ன?
\\*நன்மையின் எடைகள் இலேசாகிய நஷ்டவாளியாக இருப்பார்கள்*\\
(7:9) யாருக்கு அவரது *(நன்மையின்) எடைகள் இலேசாகி* விட்டதோ, அவர்களே *நமது வசனங்களில் அநியாயம் செய்ததால் தமக்குத் தாமே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள்.*
2 ) *வெற்றியாளர்கள் யார்?*
\\அந்நாளில் எவர்களுடைய *நன்மைகளின் எடை கனமாக இருக்குமோ* அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.\\
(7:8) யாருக்கு அவரது (*நன்மையின்) எடைகள் கனத்து விட்டதோ* அவர்களே வெற்றியாளர்கள்.
3 ) *குர்ஆன் அருளப்பட்டதின் நோக்கம்* என்ன?
\\*சத்தியத்தை மறுப்போர்க்கு எச்சரிக்கை செய்யவும், இறைநம்பிக்கை கொண்டோர்க்கு இது ஓர் அறிவுரையாகத் திகழ வேண்டும் என்பதற்காகவே அருளப்பட்டது.*\\
(7:2) *எச்சரிப்பதற்காகவும், இறைநம்பிக்கையாளர்களுக்கு அறிவுரையாகவுமே* (அருளப்பட்டது)
_______________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*