*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 51* ||

[அத்தியாயம் 6 *அல்அன்ஆம்* (கால்நடைகள்), வசனங்கள் *61- 70* வரை]

1 ) *மனிதன் எவ்வாறு அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்*?

*தரையிலும் கடலிலும் உள்ள இருள்களில்லிருந்து அல்லாஹ் எங்களை காப்பாறிவிட்டால் நாங்கள் நன்றி செலுத்துவோராக இருப்போம்* என பணிவாகவும், இரகசியமாகவும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறீர்கள்.

*அல்லாஹ் அதிலிருந்தும் மற்ற துன்பங்களிலில் இருந்தும்  காப்பாறிவிட்டால்* அவர்கள் மீண்டும் *அல்லாஹ்வுக்கு இணைவைக்கவே செய்கிறார்கள்*.  இந்த வகையில் நன்றி கெட்டவர்களாகவே இருக்கிறார்கள் ( ஆதாரம் 6: 63,64)

2 ) 6:68 வசனத்தில் சொல்லபட்டது போன்று  நபி ஸல் அவர்களுக்கு, *அவர்கள் அந்த நிலையை விட்டு நகரும் வரை அவர்களுடன் இருக்க கூடாது* என்ற கட்டளையை அல்லாஹ்  இதற்க்கு முன்பு நாம் பார்த்த  ஒரு அத்தியாயத்தின் வசனத்தில் கூறுகிறான். அந்த வசனம் என்ன ?

அல்லாஹ்வின் வசனங்கள் *மறுக்கப்படுவதையும்*, அவை *கேலி செய்யப்படுவதையும்* நீங்கள் செவியுற்றால், அதுவல்லாத வேறு விஷயத்தில் அவர்கள் ஈடுபடும் வரை அவர்களுடன் நீங்கள் அமராதீர்கள்!

*நமது வசனங்களைப் பற்றி (விதண்டாவாதத்தில்) மூழ்குவோரை நீர் கண்டால், அவர்கள் அதை விட்டும் வேறு பேச்சில் மூழ்கும்வரை அவர்களைப் புறக்கணிப்பீராக*! (6:69)

அல்லாஹ்வின் வசனங்கள் *மறுக்கப்படுதல் , கேலி செய்யப்படுதல் , வீண் வாதங்கள்  செய்யப்படுதல்* ஆகிய மூன்று  சபைகளில் கலந்து கொள்ள கூடாது.

____________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *