*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 45* ||

[அத்தியாயம் 5 (*அல்மாயிதா* – உணவு தட்டு) வசனம் *81-90* வரை]

1) *சத்தியத்தை முறிப்பதற்க்கான பரிகாரம்* என்ன?

உங்கள் குடும்பத்தினருக்கு *நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்*

*(or)*

*அவர்களுக்கு உடையளிப்பது*

*(or)*

*ஓர் அடிமையை விடுதலை செய்வது*

மேற்கண்ட (இவற்றில் எதையும்) பெறாதோர் *மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்.* [5:89]

2) *5:83 வது வசனம்* யார் தொடர்பாக இறங்கியது?

*நஜ்ஜாஷி மன்னன் மற்றும் அவரது தோழர்கள் தொடர்பாக இறங்கியதாகும்*.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி),

நூல்கள்: நஸாயீ – குப்ரா (11083), தப்ரானீ – கபீர்

3) *மூக்கில் காயம்பட்ட  நபித்தோழரின்*  பெயர் என்ன ? ( ஹதிஸ்)

*ஸஅத் பின் அபீ வக்காஸ்* (ரலி),

நூல்: முஸ்லிம் (4789)

4) *ஆடையை கூட மஹராக கொடுத்தும் திருமணம் செய்யலாம்* என கூறப்படும் ஹதிஸ் எது?

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் (எங்கள் துணைவியரோ, வேறு பெண்களை மணமுடித்துக் கொள்ளத் தேவையான செல்வமோ) ஏதும் இருக்கவில்லை.

ஆகவே நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், *(ஆண்மை நீக்கம் செய்து கொள்ள) நாங்கள் காயடித்துக் கொள்ளலாமா?* என்று கேட்டோம். அவ்வாறு செய்ய வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

அதன் பின்னர் *ஆடைக்குப் பதிலாகப் பெண்களை மணமுடித்துக் கொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்* என்று கூறிவிட்டுப் பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக் காட்டினார்கள்:

*இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை, தடை செய்யப்பட்டதாக ஆக்காதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்*. (5:87)

அறிவிப்பவர்: கைஸ் பின் அபீ ஹாஸிம், நூல்கள்: புகாரி (5075), முஸ்லிம்(2720)

_______________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *