*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
- || *கேள்வி 43* ||
[அத்தியாயம் 5 (*அல்மாயிதா* – உணவு தட்டு) வசனம் *61-70* வரை]
1) *யூத, கிருஸ்தவரகள் அவர்களுக்கு கொடுக்கபட்ட வேதத்தை பின்பற்றி இருந்தால்* அல்லாஹ் என்ன வழங்கியிருப்பான்?
தமக்கு மேலே (*வானில்) இருந்தும், தமது கால்களுக்குக் கீழே (பூமியில்) இருந்தும் புசித்திருப்பார்கள்*. (5:66)
அவர்களை விட்டும் *அவர்களின் தீமைகளை அழித்து, இன்பங்கள் நிறைந்த சொர்க்கங்களில்* அவர்களை நுழையச் செய்திருப்பான்( 5:65)
2) அவனே தாழ்த்துகின்றான்?; அவனே உயர்த்துகின்றான்?.(ஹதிஸ்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள்ளது; வாரிவழங்குவதால் அது வற்றிப்போய் விடுவதில்லை. இரவும் பகலும் (அருள்மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கிறது. வானங்களையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் வழங்கியவை அவனது கரத்திலுள்ள (செல்வத்)தை வற்றச் செய்து விடவில்லை என்பதைப் பார்த்தீர்களா?*
(வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு முன்னர்) அவனுடைய இருக்கை (அர்ஷ்), நீரின் மீது இருந்தது. *அவனது இன்னொரு கரத்தில் தராசு உள்ளது. அவனே தாழ்த்துகின்றான்; அவனே உயர்த்துகின்றான்.*
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (7411), முஸ்லிம் (1816)
__________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*