*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 41* ||

[அத்தியாயம் 5 (அல்மாயிதா – உணவு தட்டு) வசனம் 41-50 வரை]

1) கடித்தவர்க்கும் கடிபட்டவர்க்கும் அல்லாஹ்வின் தூதர் வழங்கிய தீர்ப்பு என்ன?

ஒருவர், மற்றொருவரின் கையைக் கடித்தார். அப்போது (கடிபட்டவர்) தமது கையை அவரது வாயிலிருந்து இழுத்தார். இதனால் *கடித்தவரின் முன் பற்கள் இரண்டு விழுந்து விட்டன*.

இதையொட்டி அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், *உங்களில் ஒருவர் தம் சகோதரனின் கையை ஆண் ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிப்பாரா*? (அதுவரை அவன் தனது கையை அப்படியே வைத்துக் கொண்டிருப்பானா?

எனவே இதனால் பல்லிழந்த) *உமக்கு இழப்பீட்டுத் தொகை கிடையாது* என்று சொன்னார்கள்.

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி),

நூல்கள்: புகாரி (6892), முஸ்லிம் (3456)

2) *இன்ஜீல் வேதம் தவ்ராத்க்கு முன்பு வழங்கபட்டது சரியா? தவறா?* ஆதாரம் வசன எண்

*தவறு*. (5:46)

*இன்ஜீல் ஈஸா நபிக்கு வழங்கபட்டது*.

*தவ்ராத் மூஸா நபிக்கு வழங்கபட்டது*.

3) *பொய்யான செய்தியை கேட்டு  அதை நபி (ஸல்) அவர்களிடம் வராத மக்களிடம் கூறுபவர்களாக யார் இருந்தார்கள்*? ( வசன எண்)

*யூதர்கள்* ( 5:41)

4) *அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும்* என நபி (ஸல்) யாரிடம் கூறினார்கள்?

*அனஸ் பின் நள்ரு* (ரலி) புகாரி (2703), நஸாயீ (4674), அபூதாவுத்(3979), இப்னுமாஜா (2639), அஹ்மத் (11854)

5) *யாருக்கு இழப்பீட்டு தொகை சமமாக ஆக்கினார்கள்?*

  *பனூ குறைளா கூட்டத்தாருக்கு* இழப்பீட்டுத் தொகையைச் சமமானதாக ஆக்கினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: *நஸாயீ* (4652)

________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *