*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| கேள்வி 37 ||
(அத்தியாயம் 5( அல்மாயிதா – உணவு தட்டு) வசனம் 1-10வரை)
1) *இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது எது ?*
* நீதி செலுத்துவது ( 5:8)
—————————–
2) உங்களுக்கு எவ்வித *சிரமத்தையும்* ஏற்படுத்த அல்லாஹ் விரும்பவில்லை. (5:6)
—————————–
3) *கூர்மையான எலும்பை கொண்டு மிருகங்களை அறுத்து உண்ணலாமா?* ஆதாரம்?( ஹதிஸ்)
*உண்ண கூடாது*
—————————–
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், *அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் (கூரான) கத்திகள் இல்லையே!* என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், *இரத்தத்தைச் சிந்தக் கூடியது எதுவானாலும் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அதனால் அறுக்கப்பட்டு)விட்டால் அதை நீங்கள் உண்ணலாம். நகத்தாலும் பல்லினாலும் (அறுக்கப்பட்டதைத்) தவிர! நகங்கள் அபிசீனியர்களின் கத்திகளாகும். பல் என்பது எலும்பாகும்* என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ராஃபிவு பின் கதீஜ் (ரலி), நூல்கள்: புகாரி (5503), முஸ்லிம் (3978)
—————————–
4) *5:3 வது வசனம் எப்போது இறக்கபட்டது*?( ஹதிஸ்)
உமர் (ரலி) அவர்கள் இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு *வெள்ளிக்கிழமையில் அரஃபாப் பெருவெளியில்* நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும் போது தான் (இவ்வசனம் அருளப்பட்டது; அந்த நாளே பண்டிகை நாள்தான்)” என்றார்கள்.( *புகாரி 45*, முஸ்லிம்(5740)
__________________________ *Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*