*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 30* ||
[அத்தியாயம் 4 *அந்நிஸா-பெண்கள்* (வசனங்கள் *111-120* வரை)]
1. *பெண்கள் காது மூக்கு குத்துவது இறைவன் படைத்த படைப்பில் மாற்றம் ஏற்படுத்துவதாக அமையும்* என்பதை வலியுறுத்தும் குர்ஆன் வசனம் எது?
2. எவற்றில் *நன்மை உண்டு & எவற்றில் நன்மை இல்லை?*
3. *யார் அவதூறையும் வெளிப்படையான பாவத்தையும்* சுமந்து கொண்டவர்? (4:112)
__________________________
2. நன்மையானவை- *தர்மம் நன்மையான காரியங்கள் மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல்*
நன்மையற்றவை- *மனிதர்களின் பெரும்பாலான இரகசியப் பேச்சுகளில் எவ்வித நன்மையும் இருப்பதில்லை.*
அவர்களுடைய *இரகசியப் பேச்சுக்கள் அதிகமானவற்றில் எந்த நன்மையும் இல்லை. தர்மத்தையும், நற்காரியத்தையும், மக்களிடையே இணக்கம் ஏற்படுத்துவதையும் ஏவியவர்களைத் தவிர*! (4:114)
___________________________
3. *ஒரு குற்றத்தையோ அல்லது பாவத்தையோ செய்து அதை(த் தான் செய்யவில்லையென்று மறைத்து) குற்றமற்ற (மற்றொரு)வர் மீது சுமத்தினால்*
ஒரு தவறோ அல்லது பாவமோ செய்துவிட்டுப் பிறகு அதைக் குற்றமற்றவர்மீது யார் சுமத்துகிறாரோ அவர், அவதூறையும் பகிரங்க பாவத்தையுமே சுமந்து கொண்டார். (4:22)
___________________________
1. நான் உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை எடுத்துக் கொண்டு அவர்களை வழிகெடுப்பேன். அவர்களிடம் தவறான எண்ணங்களை ஏற்படுத்துவேன். அவர்களுக்கு நான் ஏவுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். மேலும் நான் அவர்களுக்கு ஏவுவேன்; *அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளில் மாற்றம் செய்வார்கள்*” என்று (ஷைத்தான்) கூறினான்.
பெண்கள் காது மூக்கு குத்துவது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றா ?
அல்லாஹ் படைத்த படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. காதுகளைக் கிழிப்பதும், அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்வதும் ஷைத்தானுடைய செயல் என்று குர்ஆன் கூறுகிறது.
“அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். திருக்குர்ஆன் 4:119
அல்லாஹ் வடிவமைத்ததில் மாற்றம் செய்யக் கூடாது என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது.
காதுகளிலும், மூக்கிலும் துளையில்லாமலே அல்லாஹ் மனிதர்களை வடிவமைத்துள்ளான். காது, மூக்கு குத்தினால் இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அடிப்படையில் காது மூக்கு குத்துவது கூடாது என்ற முடிவுக்கு வரலாம்.
அல்லாஹ் படைத்த உறுப்புக்களில் மாற்றம் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தடை செய்துள்ளார்கள்.
பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி); நூல் : புகாரி 5931
அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) *அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?’* என்று கூறினார்கள்.
இச்செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, ‘உம்மு யஅகூப்’ எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து, ‘இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார்.
அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், ‘(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன்.
நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். ‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதைவிட்டும் நீங்கள் விலகி இருங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா?’ என்று கேட்டார்கள். அந்தப் பெண், ‘ஆம் (ஒதினேன்)’ என்று பதிலளித்தார். அப்துல்லாஹ்(ரலி),
*’நபி(ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்’* என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி, ‘உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக கருதுகிறேன்‘ என்று கூறினார். அப்துல்லாஹ்(ரலி), ‘சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!’ என்று கூறினார்கள். எனவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்’ என்று கூறினார்கள். ஸஹீஹுல் *புகாரி: 4886.*
இறைவன் வழங்கியுள்ள உருவத்தை மாற்றுவதால் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.
இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்தல் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவை அனைத்தும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.
காது, மூக்கு குத்துவதில் இந்த அம்சம் இருப்பதால் இது தடை செய்யப்பட்டதாகும்.
மேலும் அல்லாஹ்வின் படைப்பில் மனிதனின் வடிவம் தான் அழகிய வடிவமாகும்.
மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.
திருக்குர்ஆன் 95:4
பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். திருக்குர்ஆன் 23:14
“அஞ்ச மாட்டீர்களா? அழகிய படைப்பாளனும், உங்கள் இறைவனும், உங்கள் முன்னோரின் இறைவனுமாகிய அல்லாஹ்வை விட்டு விட்டு “பஅல்’ எனும் சிலையைப் பிரார்த்திக்கிறீர்களா?
திருக்குர்ஆன் 37:125
அழகிய படைப்பாளன் என்று அல்லாஹ் தனக்குப் பெயர் சூட்டியுள்ளான். அவன் எதை எப்படி படைத்துள்ளானோ அது தான் அழகு.
ஆண்களுக்கு எவை அழகோ அவற்றை ஆண்களுக்கு வழங்கியுள்ளான். பெண்களுக்கு எவை அழகோ அவற்றைப் பெண்களுக்கு வழங்கியுள்ளான்.
காது மூக்கு குத்தினால் அல்லாஹ் அழகாகப் படைக்கவில்லை என்று சொல்லாமல் சொல்கிறோம்.
காது மூக்கு குத்தலாம் என்ற கருத்துடையவர்கள் பின் வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு காது மூக்கு குத்தலாம் என வதிடுகின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி); நூல் : புகாரி (98)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னிலையில் காது மூக்கு குத்தும் போது அவர்கள் அதைத் தடுக்காமல் இருந்தால் காது மூக்கு குத்தலாம் என்று நாம் முடிவு செய்யலாம். ஆனால் இந்த ஹதீஸில் அப்படி எதுவும் இல்லை. முன்னரே காது குத்தியவர்கள் நபிகள் நாயகம் முன்னால் இருந்துள்ளனர் என்பது தான் இந்த ஹதீஸில் உள்ளது.
சட்டம் தெரியாமல் இருக்கும் நேரத்தில் காது, மூக்கு குத்தியிருந்தால் துளையிடப்பட்ட அந்தக் காதில் ஆபரணங்களைப் போடுவதை நபியவர்கள் தடை செய்யவில்லை என்ற கருத்தைத் தான் இதில் இருந்து எடுக்க முடியும்.
மார்க்கச் சட்டத்தை அறிவதற்கு முன்னால் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட காரியத்தை ஒருவர் செய்தால் அதற்காக அவர் குற்றம் பிடிக்கப்பட மாட்டார். தவறு என்று தெரிந்த பிறகு செய்தாலே அவர் குற்றவாளியாவார். இது ஒரு பொதுவான அடிப்படை விதி.
ஆபரணங்களைக் காதில் துளையிடாத வண்ணம் காதை சுற்றி தொங்க விடுவதை மார்க்கம் தடை செய்யவில்லை. அதே சமயத்தில் இறைவன் படைப்பில் மாற்றம் செய்யும் விதமாக துளையிட்டு ஆபரணங்களைக் அணிவதைத்தான் கூடாது என்பதாக புரிந்து கொண்டால் நலம்.
கூடுதல் தகவலாக..
*கத்னா (சுன்னத்) செய்வது உருவத்தை* மாற்றுவதாக அமையாதா⁉️
இந்தக் கேள்விக்கு *இரண்டு விதமான பதில்கள் இருக்கிறது*.ஒன்ற கத்னா செய்வதைப் பொருத்தவரையில் *இறைவன் கத்னா செய்வதற்கு அவனுடைய நபியின் மூலம் நமக்குக் கட்டளை* பிறப்பித்துள்ளான்.
நபியவர்களே கட்டளையிட்டதை நாம் செய்வது எப்படி உருவ மாற்றமாக அமையும்⁉️ அது அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இஸ்லாம் நமக்குத் தெளிவாக அறிவித்துவிட்டது.
இரண்டாவது கத்னா செய்பவர்கள் யாரும் அழகுக்காக கத்னா செய்வதில்லை. *கருவரைக்குள் நாம் இருக்கும் காலம் வரை மர்ம உருப்பு மூடியிருப்பதுதான் குழந்தையின் உடலுக்கு நல்லது.*
*வெளியில் வந்தவுடன் அதை அகற்றுவதுதான் உடலுக்கு உகந்தது* என்பது விஞ்ஞானமே இன்று ஒத்துக் கொண்ட ஒரு விஷயம் தான் *அதனால் தான் அதனை நபியவர்களே அகற்றும் படி* கட்டளையிட்டுள்ளார்கள்.
*இது இறைவனின் படைப்பில் குறை காண்பதாக* ஆகாது.
—————————-
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாமா?
பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதில் இரண்டு வகைகள் உள்ளன. ஒருவர் தன்னுடைய தோற்றத்தை மாற்றிக் கொள்வதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டால் அது மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் தடுக்கப்பட்ட செயலாகும். ஆனால் பொதுவான மனிதத் தோற்றத்திற்கு மாற்றமாக அமைந்த, உடலியல் ரீதியான குறைபாடுகளைச் சரி செய்வதற்காக சர்ஜரி செய்து கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. இதற்கான ஆதாரம் வருமாறு.
அறியாமைக் காலத்தில் நடந்த கிலாப் போரின் போது என்னுடைய மூக்கு உடைபட்டுவிட்டது. எனவே நான் வெள்ளியினால் மூக்கு செய்து பொருத்திக் கொண்டேன். அதில்எனக்குக் கெட்ட வாடை ஏற்பட்டது. அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குத்தங்கத்தால் ஆன மூக்கு பொருத்தும் படி உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர் : அர்ஃபஜா பின் அஸ்அத் (ரலி); நூல்கள் : திர்மிதீ 4232
*அல்லாஹ் மிக அறிந்தவன்*
https://eagathuvam.com/பெண்கள்-காது-மூக்கு-குத்/