*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 29* ||
[அத்தியாயம் 4 *அந்நிஸா-பெண்கள்* (வசனங்கள் *101-110* வரை)]
1. *முஃமின்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட கடமை எது?*
2. *அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை?*
3. இந்த அடியானை *அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை* என்று நபியவர்கள் எப்போது கூறினார்கள்?
______________________
1) *தொழுகை* ( 4:103)
——————–
2) *கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவனை* அல்லாஹ் நேசிப்பதில்லை.
or
*நம்பிக்கைத் துரோகம் செய்பவனையும் பாவம் புரிவதையே வழக்கமாகக் கொண்டவனையும்* அல்லாஹ் நேசிப்பதில்லை.
or
*பெரும் மோசடிக்காரனாகவும், பாவியாகவும் இருப்பவனை* அல்லாஹ் நேசிக்க மாட்டான்.(4:107)
————————
1. எந்தவொரு முஸ்லிமும் *ஒரு பாவத்தைச் செய்து, பின்னர் உளூச் செய்து இரண்டு ரக்அத்கள் தொழுது, அந்தப் பாவத்திற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடினால்* அவரை அல்லாஹ் மன்னிக்காமல் இருக்க மாட்டான்” என்று நபிகளார் சொல்லிவிட்டு,
*யார் தீமை செய்துவிட்டு, அல்லது தனக்குத் தானே அநியாயம் செய்துவிட்டு, பிறகு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருகிறாரோ அவர் அல்லாஹ்வை மன்னிப்புமிக்கவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் காண்பார்* என்ற (4:110) வசனத்தையும் ஓதினார்கள்(ஹதீஸின் சுருக்கம்)
______________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*