*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 26* ||

[அத்தியாயம் 4 *அந்நிஸா-பெண்கள்* (வசனங்கள் *71-80* வரை)]

1. யாருக்கு *மகத்தான நற்கூலி* வழங்கப்படும்?

2. *அக்கிரமக்காரர்களுக்கு எதிராக இறை நம்பிக்கையாளர்கள் செய்த பிரார்த்தனை என்ன?*

3. அல்லாஹ் *யாருக்கு தூதரை பாதுகாவலராக அனுப்பவில்லை*?

________________________

1) *மறுமை (வாழ்க்கை)க்காக இவ்வுலக வாழ்க்கையை  விற்றுவிட்டு அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்து கொல்லப்படுவது அல்லது வெற்றி பெறுபவர்களுக்கு* அல்லாஹ் மகத்தான கூலியைக் கொடுக்கின்றான் .

மறுமைக்காக இவ்வுலக வாழ்வை விற்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும்! அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்படுவோருக்கு, அல்லது வெற்றி பெறுவோருக்கு மகத்தான கூலியை வழங்குவோம். (4:74)

_________________________

2. *எங்கள் இறைவனே! அநியாயக்காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து எங்களுக்கு ஒரு பாதுகாவலரை ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து எங்களுக்கு ஓர் உதவியாளரையும் ஏற்படுத்துவாயாக!*

_________________________

3.  அல்லாஹ்வின் தூதருக்குக் கீழ்ப்படியாமல் புறக்கணிப்பவர்களுக்கு, தூதரை பாதுகாவலராக அனுப்பவில்லை.

யார் இத்தூதருக்குக் கட்டுப்படுகிறோரோ அவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு விட்டார். *யார் புறக்கணிக்கிறாரோ அவர்களுக்குப் பாதுகாவலராக உம்மை நாம் அனுப்பவில்லை*. (4:80)

_________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *