*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 251* ||
அத்தியாயம் 43 – (அஸ்ஸுஹ்ருஃப் – அலங்காரம் ) 21-70 வசனம் வரை.
_________________________________
1 ) வசனம் 43:23ல் “ஆடம்பரத்தில் இருந்தவர்கள்” (مُتْرَفُوهَا) யார்?
தங்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதரின் (எச்சரிக்கையாளரின்) போதனைகளை நிராகரித்து, “நாங்கள் எங்கள் முன்னோரை ஒரு வழிமுறையில் கண்டோம். அவர்களின் அடிச்சுவடுகளையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறிய ஊர்களில் இருந்த சுகவாசிகள் (*செல்வந்தர்கள்*) ஆவர். (43:23)
_________________________________
2 ) நபி இப்ராஹீம் (அலை) என்ன தீர்மானம் எடுத்தார்?
“என்னைப்
படைத்தவனையன்றி *நீங்கள் வணங்குவனவற்றை விட்டும் நான் விலகிக் கொண்டேன். அவனே எனக்கு நேர்வழி காட்டுவான்*” என்று (தீர்மானம் எடுத்து) தம் தந்தையிடமும், சமுதாயத்தினரிடமும் கூறினார். (43:26, 27)
_________________________________
3 ) அவர்கள் தங்கள் வழி தவறு என்று உணர்ந்தபோதும் ஏன் விட்டுவிடவில்லை?
(அவர்கள் உணர்ந்ததாக வசனங்கள் கூறவில்லை.) மாறாக தங்களுக்குச் சிறந்த வழிகாட்டுதல் (43:24) மற்றும் “உண்மை” (43:30) வந்தபோது, *அவர்கள் அதை “இது சூனியம். நாங்கள் இதை மறுப்போரே” எனக் கூறி நிராகரித்தார்கள்*. (43:30)
_________________________________
4) இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியனவை யவை?
*பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களும் தட்டுகளும்*. (புகாரி 5426, முஸ்லிம் 4195)
_________________________________
5 ) அறிவுரையைப் புறக்கணிப்பவருக்கான நண்பன் யார்?
*ஷைத்தான்*. (43:36)
_________________________________
6 ) நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை எளிமையானது என்பதை எந்த சான்றுகள் காட்டுகின்றன?
அவர்கள் விரிப்பு ஏதும் இல்லாத *ஈச்சம் பாயில் படுத்திருந்ததும், அதனால் அவர்களின் விலாப்புறத்தில் பாயின் சுவடு* பதிந்திருந்ததும், அவர்களின் தலையணை *ஈச்ச நார்களால் நிரப்பப்பட்ட தோலால் ஆனதாக இருந்ததும்*. (புகாரி 4913, முஸ்லிம் 2947)
_________________________________
7 ) அல்லாஹ் பிர்ஃஅவுன் மக்களை எந்த எடுத்துக்காட்டாக ஆக்கினான்?
*(அழிவில்) முந்தியவர்களாகவும், பின்வருவோருக்கு* (தகுந்த) எடுத்துக்காட்டுகளாகவும் ஆக்கினான். (43:56)
_________________________________
8 ) அல்லாஹ் எந்த எச்சரிக்கையை வழங்குகிறான்?
*தான் நாடியிருந்தால், பூமியில் (மனிதர்களாகிய) உங்களுக்குப் பதிலாக வானவர்களைத் தலைமுறையினராக ஆக்கியிருக்க முடியும்* (என்ற தன் வல்லமையைக் கூறி எச்சரிக்கிறான்). (43:60)
_________________________________
9 ) மக்கள் யாரை எடுத்துக்காட்டாகச் சொல்லியபோது விவாதம் எழுந்தது?
*மர்யமின் மகனை (ஈஸாவை) எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டபோது*, மக்கள் (கேலி செய்து) கூச்சலிட்டு விவாதம் செய்தனர். (43:57-58)
_________________________________
10 ) அந்த பத்து அடையாளங்கள் என்ன ?
உலக முடிவு நாளின் மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
1 – புகை மூட்டம்
2 – தஜ்ஜால்
3 – (அதிசயப்) பிராணி
4 – சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 – ஈஸா (அலை) இறங்கி வருவது
6 – யஃஜுஜ், மஃஜுஜ்
7 – கிழக்கே ஒரு பூகம்பம்
8 – மேற்கே ஒரு பூகம்பம்
9 – அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 – இறுதியாக ஏமனிலிருந்து புறப்படும் தீப்பிழம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162
_________________________________
11 ) எந்த நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருப்பார்கள் ?
அந்நாளில் உற்ற நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருப்பார்கள் (இறையச்சமுடையோரைத் தவிர). (43:67)
_________________________________
12) முஸ்லிம்களுக்கு என்ன கூறப்படும்?
“என் அடியார்களே! இன்று உங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள்” (43:68) என்றும், “சொர்க்கத்தில் நுழையுங்கள்! நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்விக்கப்படுவீர்கள்” (43:70) என்றும் கூறப்படும்.
_________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*