*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 250* ||
அத்தியாயம் 42 – [அஷ்ஷுரா (ஆலோசனை செய்தல் ) 31- வசனம் 53 வரை.]
அத்தியாயம் 43 – (அஸ்ஸுஹ்ருஃப் – அலங்காரம் ) 1-20 வசனம் வரை.
_________________________________
1 ) எது மிகச் சிறந்ததும் நிலையானதுமாகும் ?
அல்லாஹ்விடம் இருப்பது மிகச் சிறந்ததும், நிலையானதுமாகும். (42:36)
_________________________________
2 ) யாருக்கு அல்லாஹ்விடம் கூலி உண்டு ?
(தீமை செய்தவரை) மன்னித்து (பிறகு அவருடன்) இணக்கமாகச் செல்பவருக்கு அல்லாஹ்விடம் கூலி உண்டு. (42:40)
_________________________________
3 ) இறைவனின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுத் தொழுகையை நிலைநிறுத்துபவர்கள் யார் ?
இறைநம்பிக்கை கொண்டு, தமது இறைவனையே சார்ந்திருப்போர் தொழுகையை நிலைநிறுத்துவார்கள். (42:38)
_________________________________
4 ) எப்போது மனிதன் நன்றி கெட்டவனாகி விடுகிறான்?
(*மனிதனுக்கு அருள் கிடைத்து) அவர்கள் கைகள் செய்த (தீய)வற்றால் அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால்*, மனிதன் மிகவும் நன்றி கெட்டவனாகி விடுகிறான். (42:48)
_________________________________
5 ) அல்லாஹ்வின் ஆற்றலை கூறும் வசனம் ?
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது.
அவன், தான் நாடியதைப் படைக்கிறான். (தான் நாடியோருக்குப் பெண் பிள்ளைகளை, ஆண் பிள்ளைகளை, அல்லது இரண்டையும் சேர்த்துக் கொடுக்கிறான். தான் நாடியோரை மலடாக்குகிறான்).
அவன் நன்கறிந்தவன்; ஆற்றல் மிக்கவன். (42:49-50)
_________________________________
6 ) அல்லாஹ் இவ்வேதத்தை எவ்வாறு இறக்கி அருளியுள்ளான் ?
*வஹீ (இறைச்செய்தி) மூலமோ அல்லது திரைக்கு அப்பாலிருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பியோ (அல்லாஹ் மனிதர்களிடம் பேசுகிறான்*). இவ்வாறே (நமது கட்டளையாகிய) இறைச்செய்தியை (நபியே!) உமக்கு அறிவித்தோம். (42:51-52)
_________________________________
7 ) இறைவன் பாதைகளை எங்கு ஏற்படுத்தினான்?
இறைவன் *பூமியில்* பாதைகளை ஏற்படுத்தினான். (43:10)
_________________________________
8 ) எந்த நோக்கத்திற்காக உலகத்தை உருவாக்கினான் என்று குறிப்பிடப்படுகிறது?
இறைவன் பூமியை (உலகத்தை) *மனிதர்களுக்கு ஒரு தொட்டிலாக (வசிப்பிடமாக) ஆக்கினான்*. (43:10)
_________________________________
9 ) குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட நோக்கம் என்ன?
*மனிதர்கள் (அதை) விளங்கிக் கொள்வதற்காக* குர்ஆன் அரபு மொழியில் ஆக்கப்பட்டது. (43:3)
_________________________________
10 ) முஷ்ரிக்குகள் தங்கள் வழிபாட்டை எவ்வாறு நியாயப்படுத்துகின்றனர்?
“அளவிலா அருளாளன் நாடியிருந்தால் நாங்கள் இவர்களை வணங்கியிருக்க மாட்டோம்” என்று கூறி, தங்கள் இணைவைப்பிற்கு அல்லாஹ்வின் நாட்டத்தையே காரணமாகக் கூறி நியாயப்படுத்துகின்றனர். (43:20)
_________________________________
11 ) மனிதர்கள் இறந்த பின் உயிர்த்தெழுவார்கள் என்பதற்கு அல்லாஹ் கூறும் சான்று என்ன?
அல்லாஹ் வானிலிருந்து மழையைப் பொழிவித்து, (வறண்டு) இறந்த பூமியை மீண்டும் உயிர்ப்பிப்ப(தைச் சுட்டிக்காட்டி, இ)வ்வாறே நீங்களும் (இறந்த பின்) உயிர்ப்பித்து வெளிப்படுத்தப்படுவீர்கள் என்று சான்று கூறுகிறான். (43:11)
_________________________________
12 ) நபி(ஸல்) நமக்கு கற்றுக்கொடுக்கும் துஆ மற்றும் வசனம் எண் குறிப்பிடுக.
வாகனத்தில் ஏறி அமர்ந்ததும் ஓத வேண்டிய பயண துஆவை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
அவனே அனைத்து இணைகளையும் படைத்தான். நீங்கள் சவாரி செய்யும் கப்பல்களையும், கால்நடைகளையும் உங்களுக்காக உண்டாக்கினான். அவற்றின் முதுகில் நீங்கள் ஏறிச் செல்வதற்காகவும், பின்னர் அவற்றில் நீங்கள் அமர்ந்ததும் உங்கள் இறைவனின் அருளை நினைவு கூர்ந்து, “நாங்கள் இதற்குச் சக்தியற்றவர்களாக இருந்த நிலையில் எங்களுக்கு இதை வசப்படுத்தியவன் தூயவன். நாங்கள் எங்கள் இறைவனிடமே மீண்டு செல்லக்கூடியவர்கள்”
(“சுப்ஹானல்லதீ சக்கர லனா ஹாதா, வ மா குன்னா லஹு முக்ரினீன, வ இன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன். அல்லாஹும்ம, இன்னா நஸ்அலுக ஃபீ சஃபரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா, வ மினல் அமலி மா தர்ளா. அல்லாஹும்ம, ஹவ்வின் அலைனா சஃபரனா ஹாதா. வத்வி அன்னா புஅதஹ். அல்லா ஹும்ம அன்த்தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி, வல்ஃகலீஃபத்து ஃபில்அஹ்ல். அல்லாஹும்ம, இன்னீ அஊது பிக்க மின் வஉஸாயிஸ் ஸஃபரி, வ கஆபத்தில் மன்ழரி, வ சூயில் முன்கலபி ஃபில்மாலி வல்அஹ்ல்”) (43:13-14 மற்றும் முஸ்லிம் 2612)
_________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*