*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 25* ||

[அத்தியாயம் 4 *அந்நிஸா-பெண்கள்* (வசனங்கள் *61-70* வரை)]

1. எது அல்லாஹ்வின் *பேரருள்*?

2. *அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும்* பார்க்க தவறியவர்கள் யார்?

3. *நாங்கள் மனிதர்களிடையே நன்மையும் ஒற்றுமையையும் தான் விரும்புகிறோம்* என்று யார் கூறினார்கள்?

______________________

  1. அல்லாஹ் அருள்புரிந்துள்ள நபிமார்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த் தியாகம் புரிந்தவர்கள் மற்றும் உத்தமர்கள்* ஆகியோருடன் இருப்வர்கள். இவர்கள் எத்துணைச் சிறந்த தோழர்கள்!

இது அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் *உண்மையான அருளாகும்*

அல்லாஹ் அருள்புரிந்த நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிக அழகிய தோழர்கள்.

இது *அல்லாஹ்விடமிருந்துள்ள அருட்கொடையாகும்(பேரருள்)*

(4:69&70)

__________________________

2. *தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொண்டபோது, அவர்கள் நபியிடம் வந்திருந்து, அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரியிருந்து, அவர்களுக்காக நபியும் மன்னிப்புக் கோரியிருந்தால், அல்லாஹ் மிக்க மன்னிப்பு வழங்குபவனாகவும் பெருங் கருணையுடையவனாகவும் இருப்பதைக் பார்த்திருப்பார்கள்*.

தமக்குத் தாமே அநியாயம் செய்தபோது  அல்லாஹ்விடம் அவர்கள் பாவ மன்னிப்புக் கோரி, தூதரும் அவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோரியிருந்தால் அல்லாஹ்வை மிக்க மன்னிப்பவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள். ( 4:64)

__________________________

3) *நயவஞ்சகர்கள்* ( 4:61)

*அல்லாஹ் இறக்கிவைத்த (சட்டத்)தின் பக்கமும், தூதரின் பக்கமும் வாருங்கள்*’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், இந்த *நயவஞ்சகர்கள் உம்மிடம் வராமல் விலகிச் செல்வதையே* நீர் பார்க்கின்றீர்.

பின்னர் அவர்களின் கைகள் செய்த தீவினைகளின் காரணத்தால் அவர்களுக்குத் துன்பம் ஏற்படும்போது நிலைமை என்னவாகும்? பிறகு அவர்கள், *அல்லாஹ்வின் மீது ஆணையாக! நன்மை செய்வதையும், இரு பிரிவினரிடையே உடன்பாடு ஏற்படுத்து வதையும் தவிர நாங்கள் வேறெதையும் நாடவில்லை* என்று சத்தியம் செய்துகொண்டு உம்மிடம் வருவார்கள்.(4:61&62)

__________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *