*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 246* ||
அத்தியாயம் 40 – [அல்முஃமீன் (இறைநம்பிக்கையாளர்) 51-85 வசனம் வரை. ]
_________________________________
1 ) எதை இபாதத் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள
*பதில்* : *பிரார்த்தனை – அதுவே வணக்கமாகும்”* என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு “என்னிடம் பிரார்த்தியுங்கள்! நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன்” என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி), நூல்கள்: அபூதாவுத் (1264), திர்மிதீ(3294), இப்னுமாஜா (3818), அஹ்மத் (17629)
_________________________________
2 ) மறுமை நாள் என்பதற்க்கு பதிலாக, அல்லாஹ் மேற்க்கூறிய வசனங்களில் வேறொரு பெயர் கூறுகிறான் அது என்ன?
*பதில்* : சாட்சிகள் நிலைபெறும் (நிற்க்கும்)நாள் (40:51)
_________________________________
3 ) இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எந்த வேதத்திற்கு வாரிசானார்கள்?
a) குர்ஆன்
b) இன்ஜில்
c) தவ்ராத்
*பதில்* : c) தவ்ராத்( 20;80)
_________________________________
4 ) அல்லஹ்வுக்கு படைப்பதில் மிக எளிதானது
A) பூமி
B) வானம்
C) மனிதன்
*பதில்* : C) மனிதன்(40:57)
_________________________________
5 ) எதன் மூலம் நீங்கள் விளங்கியவராக ஆகலாம் என அல்லாஹ் கூறுகிறான்?
*பதில்* : மனிதர்களின் படைப்பு , வாழ்க்கை நிலையினை சிந்திப்பதன் மூலம் விளங்கியவராக ஆகலாம்
அவனே, உங்களை (தொடக்கத்தில்) மண்ணிலிருந்தும், பின்னர் விந்துத் துளியிலிருந்தும், பின்னர் சூல்கொண்ட கருமுட்டையிலிருந்தும் படைத்தான். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறான்.
அதன் பின்னர், நீங்கள் பருவ வயதை அடைவதற்காகவும், பிறகு வயோதிகர்கள் ஆவதற்காகவும் (உங்களை வாழ வைக்கிறான்). இதற்கு முன்பே உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர்.
குறிப்பிட்ட தவணையை நீங்கள் அடைவதற்காக (விட்டுவைக்கப்படுவோரும் உள்ளனர்.) இதன்மூலம் நீங்கள் விளங்கிக் கொள்வோராக ஆகலாம்.(40:67)
_________________________________
6 ) குர்ஆனில் குறிப்பிடபடாத தூதர்களை அல்லாஹ் மனித சமுதாயத்திற்க்கு அனுப்பி உள்ளான் என்பதற்க்கான ஆதாரம் என்ன?
*பதில்* : உமக்கு முன்னரும் தூதர்களை அனுப்பியுள்ளோம். அவர்களில் ஒருசிலரின் வரலாற்றை உமக்கு அறிவித்துள்ளோம். ஒருசிலரின் வரலாற்றை உமக்கு நாம் அறிவிக்கவில்லை (40:78)
_________________________________
7 ) சிலருடைய ஈமான் பலனிக்கவில்லை என்ன காரணம்?
*பதில்* : அல்லாஹ்வின் தண்டனை கண்ட போது ஈமான் கொள்வோர்களின் ஈமான்(இறைநம்பிகை) பலனளிக்காது.( 40:85)
_________________________________
8 ) மனிதன் தன்னுடைய கல்வியை வைத்தும் வழிகேட்டிற்க்கு செல்வான் எனக்கூறும் வசனம் எது?
*பதில்* :அவர்களிடம், அவர்களுக்கான தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது, தம்மிடமுள்ள கல்வியின் காரணத்தால் கர்வம் கொண்டனர். அவர்கள் எதைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது.(40:83)
_________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*