*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 243* ||

அத்தியாயம் 39 – [அஸ்ஸுமர்(கூட்டங்கள்) ) 01~30 வசனம் வரை]
_________________________________
1 ) அல்லாஹ்வையன்றி பிறரை( அவ்லியாக்கள் மற்றும் இன்னபிறவற்றை) எந்த நோக்கத்திற்க்காக பாதுகாவலர்களாக ஏற்படுத்தி கொள்கிறார்கள்?

*அவர்கள் எங்களை அல்லாஹ்வின் பக்கம் மிகவும் நெருக்கமாக்கி வைப்பார்கள் என்பதற்காகவே* தவிர நாங்கள் அவர்களை வணங்கவில்லை (39:3)
_________________________________
2 ) ஒரு மனிதனின் மரண நேரத்தில் எந்த இரண்டு செயல்கள் ஒருசேர அமைந்தால் அவர் எதிர்பார்ப்பதை அல்லாஹ் வழங்குவான்?

*அல்லாஹ்வின் அருளை எதிர்பார்ப்பது, தனது பாவங்களை எண்ணி அஞ்சுவது*.

(அனஸ் (ரலி), நூல்கள்: திர்மிதீ (905), இப்னுமாஜா (4251)
_________________________________
3 ) சொர்க்கவாசிகளில் சிறப்பு அறைகளில் இருப்போர் யார்?

*அல்லாஹ்வின்மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத் தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றுக் கொண்டவர்களே ஆவர்* என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: புகாரி(3256), முஸ்லிம்(5446)
_________________________________
4 ) நபி ஸல் அவர்கள் எவ்வாறு பணிக்கப்பட்டுள்ளார்கள்?

*வணக்கத்தை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கி, அவனையே வணங்க வேண்டும்* என்று பணிக்கப்பட்டுள்ளேன். *கட்டுப்பட்டோரில் நான் முதல்வனாக இருக்க வேண்டும் என்றும் பணிக்கப்பட்டுள்ளேன்* என்று (நபியே!) கூறுவீராக!(39:11,12)
_________________________________
5 ) சொல்லப்படுவதை கேட்டு அதில் அழகானதை பின்பற்றுவோர் யார்?

*அறிவுடையோர்* (39:18)
_________________________________
6 ) அல்லாஹ்வின் அடியார்களுக்கு குர்ஆன் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது?

* தோல்கள் இதனால் மெய்சிலிர்த்து விடுகின்றன, பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைவுகூர்வதற்காக மிருதுவாகி விடுகின்றன*. (39:23)
_________________________________
7 ) ஓர் இறைக்கொள்கைக்கும் பல கடவுள் கொள்கைக்கும் உதாரணமாக அல்லாஹ் எதை கூறுகிறான்?

*முரண்பட்ட கருத்துடைய பல பங்காளிகளுக்கு (அடிமையாக) இருக்கும் ஒருவனையும், ஒரே மனிதருக்கு உரிமைப்பட்ட மற்றொருவனையும் அல்லாஹ் உதாரணமாகக்* கூறுகிறான். (39:29)
_________________________________ 8 ) மனிதர்களின் உள்ளங்கள், அல்லாஹ்வை நினைவு கூறுவதைவிட்டு விலகிவிட்டால் எந்த நிலைக்கு ஆளாகுவார்கள்?

*பகிரங்கமான வழிகேட்டிற்க்கு* ஆளாகுவார்கள்( 39:22)
_________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *