*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 242* ||
அத்தியாயம் – [ஸாத்(அரபு மொழியின் ஒர் எழுத்து) 31~81வசனம் வரை]
_________________________________
1 ) தந்தைக்கு தீர்ப்பு கொண்டு சோதித்த அல்லாஹ் மகனுக்கு என்ன சோதனையை வழங்கியதாக கூறுகிறான்?
(அவரை நோயுற்ற) உடலாக அவரது இருக்கையில் போட்டோம். (38:34)
_________________________________
2 ) எந்த செல்வத்தை நேசித்துவிட்டேனே என சுலைமான் நபி கூறினார்கள்?
*பயிற்சி பெற்ற உயர்ந்த ரக குதிரைகளை* (நல்ல பொருளை) நேசித்துவிட்டதாக சுலைமான் நபி கூறினார்கள். (38:31, 32)
_________________________________
3 ) நபி ஸல் அவர்களுக்கு சைத்தானை அடிபணிய செய்தது யார்?
ஷைத்தான் எனக்குக் காட்சி தந்து என் தொழுகையை முறித்துவிட முயன்றான். அவனை *அல்லாஹ்* எனக்கு அடிபணியச் செய்தான். அவனை நான் பிடித்துக் கொண்டேன். அவனை ஒரு தூணில் கட்டி வைத்து காலையில் நீங்களெல்லாம் பார்க்க வேண்டுமென விரும்பினேன். ‘எனக்குப் பின் எவருக்குமே கிடைக்காத ஆட்சியை எனக்கு அளிப்பாயாக!’ (38:35) என்று சுலைமான் நபி கூறியதை நினைவுக்குக் கொண்டு வந்தேன். (அதனால் அவனை விட்டு விட்டேன்) இழிந்த நிலையில் அவனை அல்லாஹ் ஓடச் செய்து விட்டான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (1210), முஸ்லிம் (941)
_________________________________
4 ) மேற்கூறிய வசனங்களில் கூறப்படும் நல்லடியார்கள் பெயர் என்ன?
அய்யூப் (அலை) (38:41)
இப்ராஹீம் (அலை), இஸ்ஹாக் (அலை), யாகூப் (அலை) (38:45)
இஸ்மாயீல் (அலை), அல்யஸஃ (அலை), துல்கிஃப்ல் (அலை) (38:48)
_________________________________
5 ) சொர்க்கத்தில் அல்லாஹ்வை காண்பதற்க்கு எது தடையாக இருக்கும்?
அவன் மீதுள்ள *பெருமை*’ எனும் மேலாடையே தடையாக இருக்கும். (ஆதாரம்: புகாரி 4878, முஸ்லிம் 296)
_________________________________
6 ) அய்யூப் நபிக்கு சைத்தான் எதை ஏற்படுத்தினான்?
ஷைத்தான், அய்யூப் நபிக்கு *வேதனையையும் துன்புறுத்தலையும்* ஏற்படுத்தினான். (38:41)
__________________________________
7 ) அழிவே இல்லாதது என அல்லாஹ் எதை குறிப்பிடுகிறான்?
சொர்க்கமும் , செர்க்கத்தில் கிடைக்கும் இன்பங்களும் (38:51,52,53,54)
__________________________________
8 ) ஒருவருக்கொருவர் தர்க்கித்து கொள்வோர் யார்?
நரகத்தில் உள்ள நரகவாசிகளின் தலைவர்களும், உலகில் அவர்களை பின்பற்றியவர்களும் (:59,60)
_________________________________
9 ) அல்லாஹ் படைத்த ஒருவரு(ஆதமு)க்கு பணியாமலிருக்குமாறு இப்லீஸ்சை தடுத்தது எது?
*அவன் அகந்தை கொண்டு இறைமறுப்பாளர்களில் ஆகிவிட்டான்.* (38:74)
__________________________________10 ) ரஜீம் ( رَجِيمٌۭ) என்பது யாரை குறிக்கும்?
இப்லீஸ்- யை (சைத்தானை) குறிக்கும்.(38:77)
ரஜீம்- விரட்டபட்டவன்(சபிக்கபட்டவன்)
அவுதுபில்லாஹி மினஸ்சைத்தானிர் ரஜீம்
விரட்டபட்ட சைத்தானை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்.
நீர் குர்ஆனை ஓதினால் விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக!(16:98)
_________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*