*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 241* ||

அத்தியாயம் – [ஸாத்(அரபு மொழியின் ஒர் எழுத்து) 01-30 வசனம் வரை]
__________________________________1 ) அல்லாஹ்வின் வேதத்தில் சந்தேகத்தில் இருக்க நிராகரிப்பாளர்கள் கூறிய காரணம் என்ன?

*தங்களுக்கு இடையில் இருந்து ஒருவருக்கு (நபிகளாருக்கு) மட்டும் வேதம் அருளப்பட்டதா* என்று கேள்வி எழுப்பி, அவர்கள் அல்லாஹ்வின் அறிவுரையில் சந்தேகம் கொண்டனர் (38:8).

இறைத்தூதரை *பொய்யர், சூனியக்காரர்* என்று கூறி நபிகளாரை நம்ப மறுத்தனர் (38:4)

*பல கடவுள்களை ஒரே கடவுளாக ஆக்கியதை வியப்பாகக் கருதி* “கடவுள்களை ஒரே கடவுளாக ஆக்கி விட்டாரா? இது வியப்பான செய்தி தான்” என்று கூறி நபிகளாரை நம்ப மறுத்தனர் (38:5).

இந்த அறிவுரையை *கட்டுக்கதை* என்று நிராகரித்து, *இதை வேறு மார்க்கத்தில் நாம் கேள்விப்பட்டதில்லை. இது கட்டுக்கதை தவிர வேறில்லை* என்று கூறி நபிகளாரை நம்ப மறுத்தனர் (38:7).
__________________________________
2 ) நிராகரிப்பாளர்களின் தலைவர்கள் அந்த மக்களிடம் கூறியது என்ன?

அவர்களின் தலைவர்கள், “(*நபியை விட்டு) சென்று விடுங்கள், உங்கள் தெய்வங்களை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்*” இதில் ஏதோ (சுயநலம்) நாடப்படுகின்றது என்று கூறினார்கள் (38:6).
__________________________________
3 ) தாவூத் நபிக்கு பறவைகள் எவ்வாறு கட்டுபட்டு இருந்தது ?

அவைகள் அழைத்தால் வரக்கூடியவையாகளாக *ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டமாக* தாவூத் நபிக்கு அல்லாஹ் கட்டுப்படுத்தி கொடுத்து இருந்தான்.
__________________________________
4 ) தாவூத் நபிக்கு வழங்கப்பட்ட ஸ்பெசல் செயல் திறன் என்ன?

*வலிமை & தெளிவாகப் பேசுதல்*

வலிமைமிக்க நமது அடியாராகிய தாவூதை நினைவு கூர்வீராக! (38:17)

*தெளிவாகப் பேசும்* ஆற்றலையும் வழங்கினோம்.(38:20)
__________________________________
5 ) மனோ இச்சையை (“ஹவா”ٱلْهَوَى) பின்பற்றினால், நம்மை அது எங்கு கொண்டு செல்லும் ?

மனோ இச்சையைப் பின்பற்றுவது, *அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்துவிடும்*. (38:26)
__________________________________
6 ) கூட்டாளிகள் பெரும்பாலும் எவ்வாறு உள்ளதாக கூறப்படுகிறது?

கூட்டுச் சேர்வோரில் அதிகமானோர் *ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைப்பவர்களாக* உள்ளனர். இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்வோரைத் தவிர (38:24)
__________________________________
7 ) ஒரு ஆட்சியாளர் எவ்வாறு இருக்க வேண்டும்?

ஒரு ஆட்சியாளர் மக்கள் மத்தியில் *நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும்* மற்றும் மனோ இச்சையைப் பின்பற்றக்கூடாது. (38:26)
__________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *