*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 240* ||
அத்தியாயம் 37 அஸ்ஸாஃப்ஃபாத் (அணிவகுத்து நிற்போர்) வசனங்கள்(142~182)
__________________________________
1 ) மீன் வயிற்றில் இருந்து வெட்ட வெளியில் எறியப்பட்ட யூனுஸ் (அலை) அவர்களை அல்லாஹ் எப்படி பாதுகாத்தான்?
யூனுஸ் (அலை) அவர்கள் மீது நிழல் தருவதற்காக *ஒரு சுரைக்கொடியை முளைக்கச் செய்து* அல்லாஹ் பாதுகாத்தான். (37:146)
__________________________________
2 ) எவ்வளவு தொகை மக்களுக்கு யூனுஸ் (அலை) அவர்களை அல்லாஹ் தூதராக அனுப்பினான்?
அல்லாஹ் யூனுஸ் (அலை) அவர்களை *ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்குத்* தூதராக அனுப்பினான். (37:147)
__________________________________
3 ) பொய்யர்கள் யார், யாருக்குமிடைய உறவுமுறை ஏற்படுத்துகின்றார்கள்?
*அல்லாஹ்வுக்கு பிள்ளை உள்ளது* என்று கூறுபவர்களே பொய்யர்கள் (37:151-152). அவர்கள் *அல்லாஹ்வுக்கும், ஜின்களுக்குமிடையே வம்சாவளி* உறவை ஏற்படுத்துகின்றார்கள் (37:158).
__________________________________
4 ) மேற்க்கூறிய வசனங்களில் நிராகரிப்பாளர்கள் எவ்வாறெல்லாம் வர்ணித்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
நிராகரிப்பாளர்கள், *அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றெடுத்ததாகவும்* (37:151-152),
*ஆண் மக்களை விடுத்து பெண் மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவும்* (37:153),
*அவனுக்கும் ஜின்களுக்கும் இடையில் வம்சாவளி உறவு இருப்பதாகவும்* வர்ணித்ததாக அல்லாஹ் கூறுகிறான் (37:158).
__________________________________
5 ) மேற்கூறிய வசனங்களில் யாருக்கு உதவியும் வெற்றியும் கிடைக்கும் என அல்லாஹ் வாக்களித்தான்?
*தூதர்களாகிய தன் அடியார்களுக்கே உதவியும், தன் படையினருக்கே வெற்றியும் கிடைக்கும்* என அல்லாஹ் வாக்களித்தான். (37:171-173)
__________________________________
6 ) நமது தொழுகையின் வரிசையை எவ்வாறு அமைக்க கூறினார்கள்?
*வானவர்கள் இறைவனுக்கு முன் அணிவகுப்பது போல், முதல் வரிசையை முதலில் பூர்த்தி செய்து, வரிசைகளில் இடைவெளியின்றி ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக நின்று தொழுகையின் வரிசையை அமைக்க வேண்டும்*.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி), நூல்கள்: முஸ்லிம் (736), நஸாயீ (807), அபூதாவுத் (565), இப்னுமாஜா (982), அஹ்மத் (20059)
__________________________________
7 ) அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்பதன் அர்த்தம் என்ன ?
பதில்: *அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்*. (37:182)
__________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*