*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 238* ||
அத்தியாயம் 37 அஸ்ஸாஃப்ஃபாத் (அணிவகுத்து நிற்போர்) வசனங்கள்(33~90)
__________________________________
1 ) பொருள் அறிவோம் : عْمَلُونَ,فَوَٰكِهُ.*
செயல்கள்/செயல் செய்பவர்கள்(37:39), பழவகைகள்(37:41).
__________________________________
2 ) *சொர்க்கத்தில் கொடுக்கப்படும் மதுவின் (பழச்சாறு) தன்மை* எப்படியானது?
வெண்மையாகவும், அருந்துவோருக்குச் சுவையாகவும் உள்ள ஊற்றிலிருந்து (பழச்சாறு) மது பரிமாறப்படும்.
அதில் எந்தக் கெடுதியும் இல்லை. அதனால் மதிமயங்கமாட்டார்கள்.
(37: 45,46,47).
__________________________________
3 ) சொர்க்கத்தில் உரையாடிக் கொண்டிருந்த ஒருவர் தன் நண்பனைப் பற்றி என்ன கூறுகிறார்?
அவர்களில் ஒருவர், ‘நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும், ஆகி விட்டாலும் (மீண்டும் எழுப்பப்பட்டு) கூலி வழங்கப்படுவோமா? (இதை) நம்புவோரில் நீயும் ஒருவனா?’ என்று கேட்கும் ஒரு நண்பன் எனக்கு (உலகில்) இருந்தான்” எனக் கூறுவார். (37:51,52,53)
__________________________________
4 ) சொர்க்கத்தில் உரையாடிக் கொண்டிருந்த ஒருவர், எனக்கு நண்பன் ஒருவன் உலகில் இருந்தான் எனக் கூறும் அவர் தன் நண்பனை நரகில் காணும் போது என்ன கூறுவார்?
நரகின் மையப் பகுதியில் தன் நண்பனைக் கண்டவுடன், அவர் கூறுவார்:
“*அல்லாஹ்வின்மீது சத்தியமாக! நீ என்னை அழிக்க முயன்றாய். என் இறைவனின் அருள் மட்டும் இல்லாதிருந்தால், நானும் (உன்னைப்போல நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டோரில் ஒருவனாக இருந்திருப்பேன்.* (37:56-57)
__________________________________
5 ) *ஹாதா லஹுவல் ஃபவ்சுல் அளீம்.* என்றால் என்ன?
ஹாதா லஹுவல் ஃபவ்சுல் அளீம் (هَٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِيمُ)
*இதுவே மகத்தான வெற்றியாகும்*. (37:60)
__________________________________
6 ) பொருள் அறிவோம்: ءَاثَـٰرِ
பொருள்: *அடிச்சுவடுகள்*.
அவர்களின் அடிச்சுவடுகளின்மீதே இவர்களும் விரைந்து செல்கின்றனர். (37:70)
__________________________________
7 ) ஸக்கூம் மரம்: தோற்றம் மற்றும் தன்மைகள்
தோற்றம்: ஸக்கூம் மரம் நரகத்தின் அடிப்பகுதியிலிருந்து வெளிப்படும். (37:64)
தன்மைகள்: அதன் பாளை, ஷைத்தான்களின் தலைகளைப் போல இருக்கும். (37:65)
அது அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாக ஆக்கப்பட்டுள்ளது. (37:63)
நரகவாசிகள் அதிலிருந்தே புசித்து, தங்கள் வயிறுகளை நிரப்புவார்கள். (37:66)
அதை உண்டபின், அவர்களுக்குக் கொதிநீரின் கலவை வழங்கப்படும். (37:67)
__________________________________
8 ) *இவ்வுலகத்தில் உள்ள ஒட்டுமொத்த மனித குலமும் நூஹ் நபி அவர்களின் தலைமுறையினரா?*
ஆம். (*அவரது தலைமுறைகளையே எஞ்சியிருப்போராக ஆக்கினோம்*)(35:77))
__________________________________
வசனம் 81 முதல் 90 வரை
9 ) மேற்கண்ட பத்து வசனங்களில் நூஹ் நபியின் வழித்தோன்றல்களில் வந்த நபியின் பெயர் என்ன?*
இப்ராஹீம் (அலை) (37:83)
__________________________________
10 ) இப்ராஹிம் நபி தமது தந்தையிடமும், சமுதாயத்திடமும் என்ன கேட்டார்கள்?
*நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?*
அல்லாஹ்வையன்றி பொய்யைக் கடவுள்கள் என எண்ணுகிறீர்களா? அவ்வாறாயின் அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்களுடைய எண்ணம் என்ன? (என்றும் கேட்டார்.) (37:85-87)
__________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*