*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 236* ||

அத்தியாயம் 36 யாஸீன் [(அரபு மொழியின் 28வது மற்றும் 12வது எழுத்துக்கள்-வசனங்கள் (43~73)]
________________________________
1 ) *மண்ணறையில் இருந்து எழுப்பப்பட்டவர்கள் என்ன கேள்வி கேட்பார்கள்*? அவர்களுக்கு என்ன பதில் கூறப்படும்?

மண்ணறையில் இருந்து எழுப்பப்பட்டவர்கள், *எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?* என்று கேட்பார்கள்.
இதற்கு, *அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே* என்று பதில் கூறப்படும். (36: 52)
________________________________
2 ) *அல்லாஹ் தர்மம் செய்யுமாறு ஏவும் போது இணை வைப்பாளர்களின் பதில்* என்னவாக இருந்தது?

அல்லாஹ் தர்மம் செய்யுமாறு ஏவும் போது இணை வைப்பாளர்கள், “(*இல்லாதவருக்கு) நாங்கள் உணவளிக்க வேண்டுமா? அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்கு உணவளித்திருப்பானே! தெளிவான வழிகேட்டிலேயே நீங்கள் இருக்கிறீர்கள்*” என்று பதில் கூறினர். (36: 47)
________________________________
3 ) *கப்பலில் சென்றவர்களை இறைவன் எதற்காக காப்பாற்றியதாக* கூறுகிறான்?

இறைவன் அவர்களை மூழ்கடிக்காமல் காப்பாற்றியதற்குக் காரணம், *நமது அருளின் காரணமாகவும், குறிப்பிட்ட நேரம் வரை அனுபவிப்பதற்காகவும்* ஆகும். (36: 44)
________________________________
4 ) *குற்றவாளிகளுக்கு மறுமையில் அல்லாஹ்வால் இடப்படும் கட்டளை* என்ன?

*குற்றவாளிகளே! இன்று (நல்லோர்களை விட்டுப்) பிரிந்து விடுங்கள்!* என்று அவர்களுக்குக் கட்டளையிடப்படும். (36:59)
________________________________
5 ) *எந்த மாதிரியான உடன்படிக்கை எடுத்தேன் என்று அல்லாஹ் கூறுகிறான்*?

*ஷைத்தானை வணங்காதீர்கள்! அவன் உங்களின் பகிரங்க எதிரியாவான். என்னையே வணங்குங்கள்! அதுவே நேரான வழி* என்று அல்லாஹ் ஆதமுடைய மக்களிடம் உறுதிமொழி எடுத்ததாகக் கூறுகிறான். (36:60-61)
________________________________
6 ) *சொர்க்கவாசிகளின் மகிழ்ச்சி எப்படியானதாக இருக்கும்* என்று அல்லாஹ் கூறுகிறான்?

*அந்நாளில் சொர்க்கவாசிகள் (தமது) செயல்களில் திளைத்திருப்பார்கள். அவர்களும், அவர்களது துணைகளும் கட்டிலில் சாய்ந்து நிழல்களில் இருப்பார்கள். அங்கே அவர்களுக்குக் கனிகளும், அவர்கள் கேட்டவையும் கிடைக்கும்.* (36:55-57)
________________________________
7 ) *குர்ஆனின் நோக்கங்கள்* யாவை?

* இது ஒரு அறிவுரையாகவும், தெளிவான வேதமாகவும் இருக்கிறது (36: 69).

* உயிருடன் உள்ளவர்களை எச்சரிப்பதற்காக அருளப்பட்டது (36: 70).

* இறைவனை மறுப்போருக்கு எதிரான அல்லாஹ்வின் கட்டளை உறுதியாவதற்காக அருளப்பட்டது ( (36: 70).
________________________________
8 ) பொருள் அறிவோம்:

*أَيْدِي (ஐதீ): கைகள்
* أَرْجُلُ (அர்ஜுலு): கால்கள்
* يَشْكُر (யஷ்குரு): நன்றி செலுத்துதல்
________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *