*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 235* ||

அத்தியாயம் 36 யாஸீன் [(அரபு மொழியின் 28வது மற்றும் 12வது எழுத்துக்கள்-வசனங்கள் (01~42)]
________________________________
1 ) பனுசலமா குலத்தினர்கள் மஸ்ஜிதுந் நபவீக்கு அருகில் தங்களின் வீடுகளை அமைப்பதற்கு தயாரான போது, நபி (ஸல்) அவர்கள் என்ன ஆலோசனை அவர்களுக்கு வழங்கினார்கள்?

“பனூசலிமா குலத்தாரே! உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! (ஏனெனில், *நீங்கள் பள்ளிவாசலுக்கு நடந்து வரும்) உங்கள் காலடிச் சுவடுகள் (நன்மைகளாகப்) பதிவு செய்யப்படும்* என்று கூறி, அவர்கள் தங்கள் இடத்திலேயே தங்கியிருக்குமாறு நபி (ஸல்) அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.

(முஸ்லிம் 1182, அஹ்மத் 14039)

மேற்கண்ட ஹதீஸின் மூலமாக நாம் பெரும் படிப்பினை: *இருக்கும் இடத்தில் இருந்து தொழுகைக்காக பள்ளிக்கு செல்லும் போது நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் இறைவன் நமக்கு நன்மையை பதிவு செய்வதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
________________________________
2 ) ஓர் கிராமத்தின் ஊர்வாசிகளிடம் இறைவன் இரண்டு தூதரை அனுப்பினான் பிறகு மூன்றாவது தூதரையும் அனுப்பினான் அப்போது ஊரில் உள்ள ஓர் ஊர்வாசி அம்மக்களிடம் என்ன கூறினார்?

நகரத்தின் கடைக்கோடியிலிருந்து வந்த அவர், *என் சமுதாயமே! தூதர்களைப் பின்பற்றுங்கள்! உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்காத, நேர்வழி பெற்ற இவர்களைப் பின்பற்றுங்கள்* என்று கூறினார். (36:20-21)
________________________________
3 ) நிச்சயமாக நாங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் தான் என்று தூதர்கள் சொன்ன போது அவ்வூர்வாசிகள் அவர்களுக்கு என்ன பதில் அளித்தார்கள்?

*நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்கிறீர்கள்* என்று அவ்வூர்வாசிகள் பதிலளித்தார்கள். (36:15)
________________________________
4 ) முன்னர் அழிக்கப்பட்ட பல தலைமுறையினர்கள் பற்றி இறைவன் என்ன கூறுகிறான்?

அவர்கள் (இவர்களுக்கு முன் அழிந்தவர்கள்) மீண்டும் இவர்களிடம் *திரும்பி வர மாட்டார்கள்* என்பதை இவர்கள் (தற்போதைய மறுப்போர்) அறியவில்லையா? என்று அல்லாஹ் கேட்கிறான். (36:31)
________________________________
5 ) மேற்கூறப்பட்ட வசனங்களில் தூதர்களை மறுத்த கிராமவாசிகள் எப்படி அழிக்கப்பட்டனர்?

அவர்கள் *ஒரு ஒரே ஒரு பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்*. அதன் மூலம் அவர்கள் அனைவரும் சாம்பலானார்கள் (அழிக்கப்பட்டார்கள்). (36:29)
________________________________
6 ) வ ஆயாத்துல் லஹூம் – (وَءَايَةٌۭ لَّهُمُ ) என்று எவைகளுக்கெல்லாம் இறைவன் குறிப்பிடுகிறான்?

இறைவன் கீழ்க்கண்டவற்றுக்கு ‘வ ஆயாத்துல் லஹூம்’ (அதாவது *அவர்களுக்கு ஓர் அத்தாட்சி/சான்றாகும்*) என்று குறிப்பிடுகிறான்:

1 ) இறந்த பூமியை உயிர்ப்பித்தல் –(36: 33)

2 ) பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்கள் (36: 34)

3 ) ஜோடிகள் அனைத்தையும் உருவாக்குதல் (36: 36)

4 ) இரவு மற்றும் பகல் மாற்றம் (36: 37)

5 ) சூரியன், சந்திரன் இயக்கம் (36: 38–40)

6 ) நிரப்பப்பட்ட கப்பல் மற்றும் நிலத்தில் ஏறிச் செல்லும் வாகனங்கள் (36: 41–42)
________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *