*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 234* ||

அத்தியாயம் 35 [ *ஃபாத்திர் (படைப்பவன்*) – வசனங்கள் (01~45)]
________________________________
1 ) *வறண்ட நிலத்தை எப்படி வளப்படுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான்*?

*அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைத்து விடுகிறது. இறந்த ஊருக்கு அதைப்(மழை) பொழிவிக்கிறோம்*. அதன் மூலம் இறந்த பூமியை உயிர்ப்பிக்கிறோம். மீண்டும் எழுப்புவதும் இவ்வாறே. (35:9)
________________________________
2 ) பொருள் தருக: *سماء (சமா), أرض (அர்த்), طعام (தஆம்)*

• سماء (சமா): வானம்
• أرض (அர்த்): பூமி
• طعام (தஆம்): உணவு (35:3)
________________________________
3 ) ஜிப்ரீல் (அலை) அவர்களை எந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள்?

நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரீல் (அலை) அவர்களை *அறுநூறு இறக்கைகள் இருக்கும் நிலையில் (அவரது நிஜத் தோற்றத்தில்) பார்த்தார்கள்*.

(புகாரி 3232, முஸ்லிம் 280)
________________________________
4 ) பொருள் தருக:

* ٱلظِّلُّ (அள்ளில்லு): நிழல்
* ٱلْحَرُورُ (அல்ஹரூர்): வெப்பம்
(35:21)
________________________________
5 ) *யாரை எச்சரிக்க முடியும்* என நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கூறுகிறான்?

*தனிமையில் இருக்கும்போதும் தமது இறைவனை அஞ்சி, தொழுகையை நிலைநாட்டியோரையே நீர் எச்சரிக்கை செய்ய முடியும்*. (35:18)
________________________________
6 ) *இணைக் கடவுள்களின் தன்மையை* அல்லாஹ் எவ்வாறு குறிப்பிடுகிறான்?

அவர்கள் *அணுவளவும் அதிகாரம் படைத்தவர்கள் அல்லர்*.

நீங்கள் அழைத்தாலும் *அவர்கள் உங்கள் அழைப்பை செவியுற மாட்டார்கள்*.

*செவியுற்றாலும் பதில் தர முடியாது*.

*கியாமத் நாளில் நீங்கள் அவர்களை இணை வைத்ததை மறுத்துவிடுவார்கள்*.

அதாவது, இணைக் கடவுள்கள் எந்தவித அதிகாரமும் இல்லாதவர்கள் என்றும், அவர்கள் உதவ முடியாதவர்கள் என்றும் அல்லாஹ் தெளிவாக கூறுகிறான்
(35:13-14)
________________________________
7 ) *யாருடைய காரணங்களை அல்லாஹ் மறுப்பதாக*, நபி (ஸல்) கூறுகிறார்கள்?

*அறுபது வயதுக்கு மேல் வாழ்ந்த பிறகு இன்னும் தவ்பா செய்யாமல் சாக்குப்போக்குகள் கூறுபவர்களின் காரணங்களை* அல்லாஹ் ஏற்கமாட்டான்.
(புகாரி – 6419)
________________________________
8 ) இக்குர்ஆனின் வாரிசுதாரர்கள் செய்த நல்லமல்களுக்காக சொர்க்கத்தைப் பெற்ற பிறகு அவர்களின் கூற்று எவ்வாறு இருக்கும்?

*எங்களை விட்டும் கவலையைப் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். எங்கள் இறைவன் மன்னிப்பவன்; நன்றி செலுத்துபவன். அவன் தனது அருளால் எங்களை நிலையான உலகில் தங்க வைத்தான். இங்கே எங்களுக்குச் சிரமமும் ஏற்படாது, களைப்பும் ஏற்படாது* என்று கூறுவார்கள். ( 35:34-35)
________________________________
9 ) *இணை வைப்பாளர்களின் (மறுப்போரின்) செயல்கள் அவர்களுக்கு எவ்வாறு அமையும்* என்று அல்லாஹ் கூறுகிறான்?

*அவர்களின் மறுப்பு அவர்களுக்கே எதிராக அமையும்*. அது, அவர்களின் இறைவனிடம் கோபத்தையும், தங்களுக்கு நட்டத்தையுமே தவிர வேறு எதையும் அதிகமாக்காது. (35:39)
________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *