* அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 233* ||
அத்தியாயம் 34 [ *ஸபா (ஓர் ஊரின் பெயர்*) – வசனங்கள் (21~54]
________________________________
1 ) இதில் குறிப்பிட்டுள்ள عَزِيزُ ,حَكِيمُ என்றால் என்ன?.
AA) عَزِيزُ (அஸீஸ்): (*யாராலும்) மிகைக்க முடியாதவன், யாவற்றையும் விட வலிமை மிக்கவன்.*
BB) حَكِيمُ (ஹகீம்): *ஞானமிக்கவன், நுண்ணறிவாளன்*. (34:27)
________________________________
2 ) *யாருக்கு அதிகாரம் இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான்*? எந்த வசனத்தில் கூறுகிறான்.?
*இப்லீஸ் (ஷைத்தான்)கும், இணை கடவுள்களுக்கும்* (*அல்லாஹ்வையன்றி கற்பனை செய்யப்பட்ட தெய்வங்கள்*) எந்த அதிகாரமும் இருக்கவில்லை என்று (34:21,22) வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.
________________________________
3 ) *எது தம்மிடம் நெருக்கமாக இருக்கும் செயல், எவை தம்மிடம் நெருக்கமாக இல்லை* என்று அல்லாஹ் கூறுக்கிறான்?
*நெருக்கமான செயல்*: ஈமானுடன் செய்யும் நன்மையான செயல்கள்.
*நெருக்கத்தை ஏற்படுத்தாதவை:*
நம்மிடம் இருக்கும் பொருட்செல்வமும், பிள்ளை செல்வமும் (34:37)
________________________________
4 ) இரண்டு வானவர்களில் ஒருவர் அல்லாஹ்விடம் செய்த பிரார்த்தனைகள் என்ன?.
*அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் (அதற்கு) ஈடானதை அளித்திடுவாயாக*!.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (1442), முஸ்லிம் (1836).
_______________________________
5 ) உயரமான இடத்தின் பாதையைக் கடந்து செல்லும்போது என்ன சொல்ல வேண்டும்?
*லா இலாஹ இல்லல்லாஹ்* (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்றும், *அல்லாஹு அக்பர்* (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூற வேண்டும்
நூல்கள்: புகாரி (2992), முஸ்லிம் (5237)
_______________________________
6 ) *ஸஃபா மலை மீது நின்று நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் என்ன கூறினார்கள்*? அதற்கு அபூலஹப் என்ன கூறினான்?
அபூலஹப் சம்பந்தமாக அல்லாஹ் என்ன செய்தான்?
நபிகளார் கூறியது: கடுமையான வேதனைக்கு முன் உங்களை நான் எச்சரிப்பவன். *காலையிலோ, அல்லது மாலையிலோ பகைவர்கள் உங்களைத் தாக்குவார்கள்* என்று நான் கூறினால், என்னை நம்புவீர்களா? என்று கேட்டார்கள்.
அபூலஹப் கூறியது: (கோபத்தில்) *உமக்கு அழிவுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களை ஒன்றுகூட்டினாயா?* என்று கேட்டான்.
அல்லாஹ் செய்தது: உடனடியாக அல்லாஹ், *அபூலஹபின் இரு கைகளும் நாசமாகட்டும். அவனும் நாசமாகிவிட்டான்* என்று தொடங்கும் (111வது) அத்தியாயமான ஸூரா அல்-மஸத்-ஐ அருளினான். (திர்மிதி 33630)
_______________________________
7 ) பொருள் தருக: قَرِيبٌۭ (கரீப்), بَعِيدٍۢ (பயீத்)
AA ) قَرِيبٌۭ (கரீப்): *அருகில்* என்பதாகும். (34:50)
BB ) بَعِيدٍۢ (பயீத்): *தொலைவில்* (34:53) என்பதாகும். இது ‘கரீப்’ என்பதன் எதிர்ச்சொல்
_______________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*