* அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 232* ||
அத்தியாயம் 34 [ *ஸபா (ஓர் ஊரின் பெயர்*) – வசனங்கள் (12~20]
________________________________
1 ) *ஸபா* வாசிகள் நன்றி மறந்து புறக்கணித்ததால், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய தண்டனை என்ன?
பதில்: அவர்களின் அணையை உடைக்கக்கூடிய *பெரும் வெள்ளத்தை அனுப்பினான்*. மேலும், அவர்களின் *செழிப்பான இரு சோலைகளை, கசப்பும் புளிப்புமுள்ள காய்களை உடைய, சில இலந்தை மரங்கள் மட்டுமே கொண்ட பயனற்ற தோப்புகளாக மாற்றிவிட்டான்*. (34:16)
________________________________
2 ) *ஸபா* வாசிகளுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகள் யாவை?
பதில்: அவர்களின் ஊருக்கு வலப்புறமும் இடப்புறமும் இரு சோலைகளை வழங்கி, வளமான நகரமாகவும், மிக்க மன்னிப்புடைய இறைவனும் உங்களுக்கு உண்டு என்று கூறி அருள்புரிந்தான். (34:15)
________________________________
3 ) ஸுலைமான் (அலை) அவர்கள் விரும்பியவாறு, *ஜின்கள் செய்துகொடுத்த மூன்று முக்கியப் பொருட்கள்* யாவை?
பதில்:
1. *உயரமான மாளிகைகள்*.
2. *சிலைகள்*.
3. *தண்ணீர்த் தொட்டிகளைப் போன்ற பெரிய கொப்பரைகள் மற்றும் அசைக்க முடியாத சமையல் பாத்திரங்கள்*.(34:13)
________________________________
4 ) ஸுலைமான் (அலை) அவர்களுக்கு *அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்த மூன்று முக்கிய அருட்கொடைகள்* யாவை?
பதில்:
1. *காற்றை வசப்படுத்திக் கொடுத்தான்* (அதன் காலை மற்றும் மாலைப் பயணம் தலா ஒரு மாத தூரமாக இருந்தது).
2. *செம்பை ஊற்று நீரைப் போல் அவருக்காக உருகி ஓடச் செய்தான்*.
3. அவருக்குக் *கட்டுப்பட்டு வேலை செய்யும் ஜின்களை வசப்படுத்திக் கொடுத்தான்*. (34:12)
________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*