* அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 231* ||
அத்தியாயம் 34 [ *ஸபா (ஓர் ஊரின் பெயர்*) – வசனங்கள் (01~11]
________________________________
1 ) *இறைவேதத்தைப் பற்றி இறை நம்பிக்கையாளர்களுக்கும், நிராகரிப்பாளர்களுக்கும் உள்ள வேறுபாடு* என்ன?
பதில்: *இறைநம்பிக்கையாளர்கள் (கல்வி வழங்கப்பட்டோர்)..*
அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட வேதத்தை *உண்மை என்றும், அது புகழுக்குரிய, யாவரையும் மிகைத்த அல்லாஹ்வின் நேரான வழியைக் காட்டுகிறது* என்றும் கருதுகின்றனர்.
*நிராகரிப்பாளர்கள்*…
*உலகம் அழியும் நேரம் நம்மிடம் வராது* என கூறுதல். (34:3
*இறை வசனங்களைத் தோற்கடிக்க முயழுதல்* (34:5)
அவர்கள் இந்த வேதத்தைக் கொண்டு வந்த தூதரை (நபிகளாரை) கேலி செய்து, *இறந்த பிறகு மீண்டும் உயிர்பெறுவீர்கள்* எனக் கூறும் *இவருக்குப் பைத்தியமா அல்லது இவர் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுகிறாரா?* என்று சந்தேகிக்கித்தல். (34:7,8)
________________________________
2 ) *தாவூது (அலை) நபிக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பு அருள்கள்* யாவை?
*மலைகளையும், பறவைகளையும் அவருடன் சேர்ந்து இறைவனைத் துதி செய்யுமாறு கட்டளையிட்டான்*.
*இரும்பை அவருக்கு மென்மையாக்கிக் கொடுத்து, அதிலிருந்து வலுவான போர்க் கவசங்களை உருவாக்கும் அறிவையும் ஆற்றலையும்* வழங்கினான். (34:10,11)
________________________________
3 ) *அல்லாஹுடைய அறிவின் பரந்த தன்மையை மேற்கொண்ட வசனங்களில் எவ்வாறு விவரிக்கப்படுகிறது*?
பதில்: அல்லாஹ்வின் அறிவு முழுமையானது. *பூமிக்குள் செல்வதையும், அதிலிருந்து வெளிவருவதையும், வானிலிருந்து இறங்குவதையும், வானத்தை நோக்கி மேலே செல்வதையும் அவன் அறிகிறான்*.
*வானங்களிலோ, பூமியிலோ இருக்கும் ஓர் அணுவளவு கூட அவன் அறியாமல் இருப்பதில்லை. அனைத்தும் அவனிடம் ஒரு தெளிவான பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது*. (34:3)
________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*