அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 230* ||
அத்தியாயம் 33 [ *அல் அஹ்ஸாப்* (எதிரணிகள்) வசனங்கள் (61~74]
_______________________________
1 ) அவர்கள்(பனூ இஸ்ரவேல் சமூகத்தைச் சேர்ந்த சிலர்) கூறிய *பொய்யான குற்றச்சாட்டுகளிலிருந்து, அல்லாஹ் மூஸா (அலை) அவர்களை* எவ்வாறு தூய்மைப்படுத்தினான்?
பதில்: மூஸா (அலை) அவர்கள் குளிக்கும்போது, *அல்லாஹ் ஒரு கல்லை அவர்களின் ஆடையுடன் ஓடச் செய்தான். அதைத் துரத்திச் சென்ற மூஸா (அலை) அவர்களை, பனூ இஸ்ரவேலர்கள் ஆடையற்ற நிலையில் கண்டனர்*.
அப்போது, *அல்லாஹ்வின் படைப்புகளிலேயே அழகானவராகவும், அவர்கள் கூறிய குறைகளிலிருந்து தூய்மையானவராகவும் இருப்பதை அவர்கள் நேரடியாகப் பார்த்துக் கொண்டார்கள்.*
________________________________
2 ) *நரகத்தில் முகங்கள் புரட்டப்படும் நாளில், குற்றவாளிகள் என்ன கைசேதப்பட்டுக்* கூறுவார்கள்?
பதில்: *நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?* என்று கூறுவார்கள். (33:66)
________________________________
3 ) *தாங்கள் வழிகெட்டதற்குக் காரணமாக, நரகவாசிகள் யாரைக் குற்றம் சாட்டுவார்கள்*?
பதில்: *எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்களே எங்களை வழிகெடுத்து விட்டனர்* என்று குற்றம் சாட்டுவார்கள். (33:67)
________________________________
4 ) *தங்களை வழிகெடுத்த தலைவர்களுக்கு என்ன தண்டனை வழங்குமாறு நரகவாசிகள்* கேட்பார்கள்?
பதில்: *எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!* என்று கேட்பார்கள். (33:68)
________________________________
5 ) இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் வழங்கும் இரண்டு முக்கிய அறிவுரைகள் யாவை?
பதில்:
1. *அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்*!
2. *நேர்மையான சொல்லையே கூறுங்கள்*! (33:70)
________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*