அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 229* ||
அத்தியாயம் 33 [ *அல் அஹ்ஸாப்* (எதிரணிகள்) வசனங்கள் (41~60]
_______________________________
1 ) *இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் வழங்கும் இரண்டு முக்கிய கட்டளைகள்* யாவை?
பதில்:
1. *அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்*!
2. *அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்*! (33:41-42)
________________________________
2 ) நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டதன் *ஐந்து நோக்கங்களாக மேற்கொண்ட வசனங்களில்* குறிப்பிடப்படுபவை யாவை?
பதில்: சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனை நோக்கி அழைப்பவராகவும், மற்றும் ஒளிவீசும் விளக்காகவும். (33:45-46)
________________________________
3 ) தவ்ராத் வேதத்தில் நபி (ஸல்) அவர்களின் *குணங்களாகக் கூறப்படுபவை* யாவை?
பதில்: அவர் *கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய்பவராகவோ இருக்கமாட்டார்*. தீமைக்கு பதிலாக மன்னித்து, அதைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார். (புகாரி 2125)
________________________________
4 ) *மஹர் கொடுக்க வசதியில்லாத ஒருவருக்கு, நபி (ஸல்) அவர்கள் எதை மஹராக ஆக்கி திருமணம்* செய்து வைத்தார்கள்?
பதில்: அவருக்கு மனனமாக இருந்த குர்ஆன் அத்தியாயங்களையே மஹராக ஆக்கி திருமணம் செய்து வைத்தார்கள்.(ஆதாரம்: புகாரி 5149)
________________________________
5 ) மஹர் இன்றி நபி (ஸல்) அவர்களுக்குத் தம்மையே அர்ப்பணித்த பெண்மணி யார்?
பதில்: கவ்லா பின்த் ஹகீம் (ரலி) அவர்கள். (புகாரி 5113)
________________________________
6 ) இறைநம்பிக்கையாளர்களுக்கு, நபி (ஸல்) அவர்களின் மனைவியர் விஷயத்தில் அல்லாஹ் விதித்துள்ள இரண்டு மிகக் கடுமையான தடைகள் யாவை?
பதில்:
1. *அல்லாஹ்வின் தூதரை (அவரின் குடும்ப வாழ்வில்) சிரமப்படுத்துவது கூடாது*.
2. நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு, *அவர்களின் மனைவியரைத் திருமணம் செய்து கொள்வது ஒருபோதும் கூடாது*. (33:53)
________________________________
7 ) நபியின் மனைவியர் குறித்து சில அனுமதிகளை வழங்கிய பிறகு, அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு விதித்த கட்டுப்பாடு என்ன?
பதில்: இதன் பிறகு, (*போர்க்கைதிகளாக வந்த) அடிமைப் பெண்கள் தவிர, வேறு பெண்கள் (புதிதாக மணமுடிக்க) உமக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்*. அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்தாலும் சரியே. (33:52)
________________________________
8 ) இறைநம்பிக்கையாளர்கள், நபியின் மனைவியரிடம் ஏதேனும் கேட்டால், திரைக்கப்பால் இருந்தே கேட்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதன் காரணம் என்ன?
பதில்: *இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது* என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதாவது, இரு தரப்பினரின் *உள்ளத்தில் தேவையற்ற எண்ணங்களோ, சபலங்களோ ஏற்படாமல், உள்ளத்தின் பரிசுத்தத்தன்மையைப் பேணுவதே* இதன் காரணமாகும். (33:53)
________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*